Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Siru kathaigal in tamil | கடவுள்‌ இரக்கம்‌ காட்டுவதாலேயே – கோபத்துடன்‌

Siru kathaigal in tamil-kadavul‌ irakkam‌ kattuvathaleye-kopaththudan‌

11. கடவுள்‌ இரக்கம்‌ காட்டுவதாலேயே.. .

 

 

 

கோபத்துடன்‌ வீட்டிற்கு வந்தேன்‌. “என்னங்க,

போன காரியம்‌ என்ன ஆச்சு?” என்றாள்‌ என்‌
மனைவி ரோஸி.

“அது சரி… உன்‌ மகன்‌ எங்கே? அவனைக்‌
கூப்பிடு?” என்றேன்‌ கோபத்துடன்‌.

“வசந்த்‌… வசந்த்‌…” என்று கூப்பிட்டாள்‌. அவன்‌ வளியே வந்து
மெளனமாக நின்றான்‌.

“ஏன்டா… நீங்க எல்லாரும்‌ சேர்ந்து கடைசி நாள்ல… பள்ளிக்கூடத்துல…
பல்பு. தண்ணி பைப்பபல்லாம்‌ அடிச்சி உடைச்சீங்களா?” என்றேன்‌
கோபத்துடன்‌.

“அப்படி யாருங்க சொன்னா….?” என்‌ மனைவி

“பள்ளி நீர்வாகி சாமியார்‌ சொன்னார்டி…”

“இல்லப்பா… நான்‌ உடைக்கல. கணேசும்‌ சுந்தரமும்‌ தான்‌ உடைச்சாங்க”
என்றான்‌ வசந்த்‌.

“நீ பார்த்துகிட்டு இருந்தியா….?”

அவன்‌ பதில்‌ சொல்லவில்லை.

“இப்போ என்னங்க ஆச்சு? சர்ட்டிபிக்கேட்‌ தரமாட்டேன்னுட்டாங்களா?”

“மார்க்‌ சர்டிபிக்கேட்‌ தருவாங்களாம்‌. டிசியும்‌ நன்னடத்தைச்‌ சான்றிதமும்‌
‘தரமாட்டாங்களாம்‌”.

“ஏன்‌… என்‌ பையன்‌ நல்லாத்தானே படிச்சான்‌. பனிஷண்டாம்‌ வகுப்புல
தொள்ளாயிரத்து நாற்பது மார்க்‌ வாங்கியிருக்கான்‌. பின்ன என்னவாம்‌…?”
“ஒழுக்கத்தோடு படிச்சிருக்கணும்‌. இப்போ மார்க்‌ வாங்கீ என்ன பண்ண?
அடுத்து மேற்கொண்டு படிக்க முடியாதே. அந்த பயகளோடூ இவனம்‌ நவுடித்‌

‘தனம்பண்ணிருக்கான்‌….” என்று சத்தமிட்டேன்‌.

“ஏன்‌… பையனை சத்தம்‌ போடுறீங்க. இனி அவன்‌ வேற ஊர்லதானே
படிக்கணும்‌. பேசாம சர்டிபிக்கேட்ட வாங்கிட்டு வாங்க”

“அறிவுகெட்டத்தனமா பேசாதே! அவுங்க நன்னடத்தை சர்டிபிக்கேட்‌
‘தந்தாதான்‌ அடுத்த காலேஜ்ல சேர்ப்பாங்க….”

“அடக்கடவுளே… இதென்ன சோதனை. ஏங்க… ஒண்ணு பண்ணுவோம்‌.
நம்ம பங்கத்‌ தந்தைகிட்ட சசால்லி அங்குள்ள நீர்வாகி தந்தையிடம்‌ பேசச்‌
சொல்லுவோம்‌” என்றாள்‌.

பங்குத்‌ தந்தையிடம்‌ எல்லா விவரத்தையும்‌ சொன்னோம்‌. “சரி… நான்‌
பள்ளி நீர்வாகத்‌ தந்தையிடம்‌ போனில்‌ பேசிப்‌ பார்க்கிறேன்‌…” என்றவாறு
உள்ளே தனி அறைக்கச்‌ சென்று கொஞ்ச நேரம்‌ கழித்து பங்குத்தந்தை
வந்தார்‌.

“நான்‌ அவரிடம்‌ பேசிப்‌ பார்த்தேன்‌. அவர்‌ கோபத்தோடுதான்‌ பேசுகிறார்‌.
ஒண்ணு பண்ணுங்க. நீங்க மூன்று பேரும்‌ நாளை அவரிடமே பேசிப்‌
பாருங்கள்‌. அவருக்கு நிச்சயம்‌ கோபம்‌ குறைந்திருக்கும்‌” என்று
எங்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார்‌.

மறுநாள்‌… பள்ளி நீர்வாகி தந்தையின்‌ அறையில்‌ மூவரும்‌ நின்றோம்‌.
“ஏன்‌ வந்தீர்கள்‌? நான்‌ நேற்றே சொல்லிவிட்டேனே… மார்க்‌ ஷீட்‌ மட்டும்‌
வாங்கிட்டு போங்க….”

என்‌ மனைவி உடனே… தந்தையின்‌ காலில்‌ விழுந்தாள்‌ ஃபாதர்‌ தயவு
செய்து மன்னிச்சி என்‌ பையனுக்கு வழிகாட்டூங்க…ஃபாதர்‌ என்று அழுதாள்‌.

“அம்மா… எழுந்திருங்க… பள்ளி நீர்வாகத்துல மன்னிக்க முடியாதும்மா.
(தவறு தவறுதான்‌. அதற்கு தண்டனைதான்‌ உண்டு. போங்க… டிசியும்‌
சேர்த்து தரச்‌ சொல்றேன்‌. நன்னடத்தைச்‌ சான்றிதழ்‌ தரமுடியாது” என்று
வேகமாக உள்ளே சென்றார்‌.

கல்லூரியில்‌ வரிசையாக நின்று உள்ளே சென்றோம்‌. சான்றிதழ்கள்‌
சரி பார்க்கப்பட்டன. நன்னடத்தை சர்டிபிக்கேட்‌ எங்கே என்று சரிபார்ப்பவர்‌

கேட்க.. நான்‌.”எங்கேடா… சான்றிதழ்‌ எடுத்துவர மறந்திட்டியா” என்று
சத்தம்‌ போட, என்‌ மகன்‌, “ஆமாப்பா…” என்று நடூங்க ஒரு நாடகம்‌ நடந்தது.

உடனே அவர்‌… “சரி நாளைக்குக்‌ கொண்டு வந்தீரலாமா..?” என்று
கேட்டார்‌. “சரி…” என்றான்‌ வசந்த்‌.

ம்‌

ஒரு லெட்டர்‌ எழுதீத்‌ தாங்க…. நன்னடத்தைச்‌ சான்றிதழை நான்‌
நாளை உறுதியாகச்‌ சமர்ப்பிப்பேன்‌ என்று” என்றார்‌. அப்படியே
எழுதிக்கொடுத்தோம்‌.

எங்கள்‌ விண்ணப்‌ பாரத்தைப்‌ பெற்றுக்‌ கொண்டு பணம்‌ கட்ட சொல்லி
ரசீதையும்‌ அதில்‌ இணைத்தார்‌. ஒன்றே ஒன்று நான்‌ துல்லியமாகக்‌
கவனித்தேன்‌. நன்னடத்தைக்கு நாங்கள்‌ எழுதிக்‌ கொடுத்த பேப்பரை
எங்கள்‌ விண்ணப்பபாரத்தில்‌ சேர்க்காமல்‌ அவசரமாக அவசரமாக
உள்ளே வைத்தார்‌.

அதன்பிறகு கல்லூரியில்‌ சேர அட்மிஷன்‌ கார்டூ மட்டுமே எங்களுக்கு
வந்தது.

இப்போது அவன்‌ அந்தக்‌ கல்லூரியில்‌ படித்து முடித்து நன்னடத்தையில்‌
“குட்‌” சான்றிதழோடூ வளியே பெருமையோடு வந்தான்‌.

(இது உண்மைக்‌ கதையே…)

“மனிதர்‌ விரும்புவதாலோ உழைப்பதாலோ எதுவும்‌ ஆவதில்லை.
கடவுள்‌ இரக்கம்‌ காட்டுவதாலேயே எல்லாம்‌ ஆகிறது.” (உரோ 9:18)

Exit mobile version