Thirukkural | குறள் 703

Categories அமைச்சியல்Posted on
Thirukkural-kural 703
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : குறிப்பு அறிதல்

குறள் எண் : 703

குறள் : குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

விளக்கம் : (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Kurippu arital

kural en: 703

Kural: Kurippir kurippunar varai uruppinul
yatu kotuttum kolal.

Vilakkam: (Mukam kan ivarrin) kurippukkalal ulla kurippai unara vallavarai nattin uruppukkalul etaik kotuttavatu tunaiyaka perrukkolla ventum.