Siru kathaigal in tamil | நண்பன்‌ – நாளைக்கு

Categories சிறுகதைகள்Posted on
siru kathaigal in tamil-nanban-nalaikku
Share with :  

3. நண்பன்‌

நாளைக்கு எனக்கும்‌,  திவ்யாவுக்கும்‌
கல்யாணம்‌.

திருமண அழைப்பிதழை மீண்டும்‌
பார்த்தேன்‌. தீவ்யா என்னைப்‌ பார்த்து
மல்லிகைப்‌ பூவாய்‌ சிரித்துக்‌ கொண்டிருந்தான்‌.

திவ்யா அழகானவள்‌! பண்பானவள்‌!
நேர்த்தியானவள்‌! அழகான மேடூ பள்ளம்‌

கொண்டவள்‌! அபாயகரமான வளைவு ஒநளிவு
கொண்டவள்‌! ஆங்காங்கே வேகத்தடையும்‌ உண்டு. அங்கைல்லாம்‌
கண்கள்‌ நீன்று மெதுவாகவே பயணிக்கும்‌.

அவள்‌ எனக்கு மனைவியாக கிடைப்பதே பருமை. நாளைக்கு
இந்நேரம்‌ அந்த நீலா என்னருகே உட்கார்ந்து கொண்டிருக்கும்‌. நான்‌
பேசுவதை கேட்டூக்‌ கொண்டிருக்கும்‌.

இப்படித்தான்‌ நினைத்துக்‌ காண்டிருந்தேன்‌. நண்பன்‌ ரவியை
சந்திக்கும்‌ வரை.

நேற்றுதான்‌ ரவிக்கு இன்விடேஷன்‌ கொடுக்க சென்றேன்‌.

‘இன்விடேஷனை வாங்கியவன்‌…

“இது தான்‌ பண்ணா?” என்றான்‌.

“ஆமாம்‌!”

“ஒ…!” சுரமிழந்து போனான்‌.

“ஏண்டா…. என்ன ஆச்சு?”

“இல்லை…”

“இல்லை….நீ…ஏதோ நினைக்கிறாய்‌ சொல்லுடா…!
“வேண்டாம்‌ ராபர்ட்‌… இத்தோடு விட்டுவிடு…”

“உன்‌ மனதில்‌ உள்ளதை சொல்லப்‌ போகிறாயா….இல்லையா…”

டை.
ராபர்ட்‌…

“என்ன?”

“என்ன…” எனக்கு உலகமே தலைகீழ்‌ சுற்றுவது போல்‌ இருந்தது.

“ஆமாண்டா…போன வருஷம்‌, இவளும்‌, இவள்‌ அப்பனும்‌ போலீஸ்‌
ஸ்டேசன்ல வந்து நின்னாங்க…”

“போலீஸ்‌ ஸ்டேஷன்லயா… என்ன விஷயம்‌?”

“ஏதோ….காதல்‌ விவகாரமாம்‌! அது மட்டூமல்லடா… இப்போதுகூட
ஒரு பையன்‌ கிட்ட இது பேசிகிட்டு இருக்கு…”

“என்ன…:?” அதிர்ந்தேன்‌.

“ஆமாபா…உனக்கு சந்தேகமா இருந்தா வா… என்னோட…”

இருவரும்‌ பைக்கில்‌ பறந்தோம்‌. திவ்யா வீட்டு முன்னால்‌ உள்ள நாயர்‌
டீக்கடையில்‌… உட்கார்ந்து கொண்டு டீ குடிப்பதாக பாவனை செய்தோம்‌.

சிறிது நேரத்தில்‌ ஒரு பைக்‌ வந்தது.

பார்த்தாயா…. இவன்தான்‌ அந்த ஹீரோ…

திவ்யா ஓடிவந்தாள்‌… இருவரும்‌ வாசலிலே நின்று சிரித்து பேசிக்‌
கொண்டிருந்தார்கள்‌…

அவள்‌ தலையை தட்டூகிறான்‌. அவள்‌ சிரிக்கிறாள்‌. எசல்லமாக
இவனை அடிக்கிறாள்‌. ஒரே கும்மாளம்‌!

எனக்கு உடல்‌ அனலாக கொதித்து ஆவியாக பறந்தது…. என்‌
கனவுகள்‌ எல்லாம்‌ தூள்‌ தூளானது.

“பார்த்தாயா ராபர்ட்‌…. இவள்‌ நல்லவள்‌ இல்லை…. பேசாமல்‌
கல்யாணத்தை நிறுத்திடு!”

“எப்படிடா…. நாளைக்கு கல்யாணம்‌!”

“அப்படின்னா…. அவளையே கட்டிக்கோ…”

“வேண்டாம்டா…. ரவி! இந்த கேடூ கெட்டவள்‌ எனக்கு வேண்டாம்‌.

கல்யாணத்தை நீறுத்த ஒரு ஐடியா கொடுடா….” பரிதாபமாக அவனை
வேண்டி கூனிக்‌ குறுகினேன்‌.

“டேய்‌….நீ கிறிஸ்தவன்‌ தானே!”

“ஆமாம்‌!”

“தாலி கட்டும்போது சாமியார்‌ உன்னிடம்‌ சம்மதம்‌ கேட்டூத்தானே தாலிக்‌
கட்டச்‌ சொல்வார்‌?”

“ஆமாம்‌!”

“அப்போது நீ எனக்கு விருப்பமில்லை என்று சொன்னால்‌ கல்யாணம்‌
நின்றுவிடும்‌”

“சரியாய்‌ வருமா?”

“அப்படியே செய்‌…. இதுதான்‌ சிறந்த வழி!”

“சரிடா…”

மறுநாள்‌-தீருமண நாள்‌!

சர்ச்‌…

மணமகனும்‌, மணமகளும்‌ அருகருகே உட்கார்ந்திருந்தார்கள்‌.

(திருமண ஆராதனை தொடங்கியது. பாதிரியார்‌ உள்ளே வந்தார்‌.

“பிதா…..சுதன்‌….பரிசுத்த ஆவியின்‌ வபபயராலே….’ என்று தொடங்கி
சொல்லிக்கொண்டே போனார்‌. எதுவுமே என்‌ காதில்‌ விழவில்லை…

என்‌ நினைவெல்லாம்‌… அந்த நேரம்‌ எப்போது வரும்‌….!

திரும்பி எரிச்சலோடு திவ்யாவைப்‌ பார்த்தேன்‌…இப்போதும்‌ அவள்‌
பக்கத்தில்‌ அவன்தான்‌ நின்று கொண்டிருந்தான்‌.

“பார்த்தாயா….ராபர்ட்‌…” பக்கத்தில்‌ நின்ற ரவி என்‌ காதில்‌
முணுமுணுத்தான்‌.

“எனக்கு உடம்‌பல்லாம்‌ பற்றி எரிந்தது…. இவளுக்‌கைல்லாம்‌ எதுக்கு
கல்யாணம்‌…தினமும்‌…”பற்களை நறநற வென்று கடித்தேன்‌.

“எபண்ணுக்கு தம்பி யாராவது…. மாங்கல்யதட்டை எடுத்து

மாப்பிள்ளையிடம்‌ வாங்க….” என்றார்‌ பாதிரியார்‌.

உடனே…அவன்‌ மாங்கல்ய தட்டை தூக்கிக்‌ கொண்டூ போனான்‌.

“பெண்ணுக்கு அண்ணன்‌ தம்பி இல்லைன்னாங்களே, இந்த பையன்‌
யாரு?”

பின்னால்‌ இருந்து ஒரு அம்மா கேட்க…

அடுத்த எபண்‌…. இது எபண்ணுக்கு தம்பிதான்‌…. சித்தப்பா மகன்‌
என்று சொன்னது…. எனக்கு நன்றாகவே கேட்டது.

என்னது….பெண்ணுக்கு தம்பியா…. என்‌ மைத்துனனா?

ஆகாய வளியில்‌ பறப்பது போல இருந்தது எனக்கு.

மாங்கல்ய தட்டை கொடுத்து விட்டூ வந்த அந்த இளைஞன்‌. என்கிட்டே
வந்து…

“மச்சான்‌….உங்ககிட்ட நின்ன வரு யாரு?” என்றான்‌ முணுமுணுப்பாக.

“ப்ரண்ட்‌…”

“இவனைல்லாம்‌ உங்களுக்கு பஏரண்டா…போனவருசம்‌ அக்காவுக்கு
லவ்லைட்டர்‌ கொடுத்து வலது கன்னத்தில்‌ வாங்கிக்‌ கட்டிக்கிட்டவன்‌…
போலீஸ்‌ ஸ்டேஷன்ல போய்தான்‌ பிரச்சினை முடிந்தது.”

“என்ன…” என்று திரும்பி ரவியைப்‌ பார்த்தேன்‌. அவன்‌ அங்கில்லை.
நழுவிக்‌ கொண்டிருந்தான்‌.

மறுபக்கம்‌ திரும்பினேன்‌. அங்கு களங்கமற்ற பவுர்ணமி நிலாவாக
திவ்யா பிரகாசித்துக்‌ கொண்டிருந்தாள்‌.

பாதிரியார்‌…

“இங்கே இருக்கும்‌ மணமகள்‌ திவ்யாவை உன்‌ மனைவியாக எந்தவித
வற்புறுத்தலுமின்றி ஏற்றுக்கொள்ள சம்மதிக்கிறாயா….?” என்று என்னை
கேட்க.

நான்‌ சந்தோஷத்தில்‌… சத்தமாகவே…

“ஆமாம்‌” எசொல்லிவிட, என்‌ திவ்யா உட்பட அனைவருமே சிரித்து
விட்டார்கள்‌!