Siru kathaigal in tamil | பூட்டு – வீடு

Categories சிறுகதைகள்Posted on
Siru kathaigal in tamil-poottu-veedu
Share with :  

20. பூட்டு

காட்சி :1

 

 

 

 

 

 

 

(வீடு, தாய்‌ சந்தியா, மகள்‌ ரோசாலி)

சந்தியா:  ரோசாலி… ரோசாலி… உள்ளே என்னடி பண்ணிட்டு
இருக்கே… ரோசாலி வருதல்‌

ரோசாலி:  பரீட்சைக்குப்‌ படிச்சுகிட்டு இருக்கேன்மா… அடுத்த வாரம்‌
42 பரிட்சை வருதுல்ல…. அதுதான்‌ படிக்கிறேன்‌.

சந்தியா:  பொட்ட செறுக்கி படிச்சி என்னத்தடி கிழிக்கப்‌ போறே…
பேசாம…வீட்ல இருந்து சோறு பாங்கு போதும்‌.

ரோசாலி:  அம்மா… ஏம்மா… இப்படிப்‌ பிரிச்சுப்‌ பேசுறே
பொம்பளப்பிள்ள படிக்கக்‌ கூடாதா… படிச்சு டாக்டராகக்‌
கூடாதா?

சந்தியா:  என்னது டாக்டராகப்‌ போறீயா…. அம்புட்டு பணத்துக்கு
எங்கேடி போவே… டாக்டருக்குப்‌ படிக்க எவ்வளவு பணம்‌
செலவாகும்படி…

ரோசாலி:  ஒரு ஏழு, எட்டூ லட்சம்‌ செலவாகும்மா.

சந்தியா:  கிடக்கிறது ஒட்டுத்தீ்ண்ணை கனா காண்கிறது மாடிவீடு…
என்கிற பொழப்பாப்‌ போச்சுடி… உன்‌ பொழப்பு! இந்த நூறு
நாள்‌ வேலையில்‌ நானும்‌ உன்‌ அப்பனும்‌ காலத்தை
ஓட்டிக்கிட்டு இருக்கோம்‌… உனக்கு டாக்டராகணுமாக்கும்‌!
பேசாம பள்ளிக்கூடத்துக்குப்‌ போறத விட்டுட்டு சோறு
பொங்கு…. போ… போடி.

ரோசாலி:  அம்மா… நான்‌ டாக்டராகணும்‌.

சந்தியா:  என்னடி உளறிகிட்டே நிக்கிறே…. பொட்டபிள்ளைக்கு
படிப்பே வேண்டாம்‌ நீ பேசாம… சோறுபொங்கிட்டு பீடி
சுத்தினா… நானு காசு சம்பாதிக்கலாம்‌ பேசாம
புத்தகத்தைத்‌ தூரே எறிஞ்சுட்டு…
அடூப்பங்கரைக்குப்‌ போடி.

ரோசாலி:  என்னால முடியாது. நான்‌ பள்ளிக்கூடத்துக்குத்தான்‌
போவேன்‌… பரீட்சைக்கு ஃபீஸ்‌ கட்டணும்‌ ஒரு
250 ரூபாய்‌ தா…

சந்தியா:  பேசாம…. அடுப்பங்கரைக்கு போறியா… புத்தகத்தைப்‌

பிடுங்கி அடுப்புல போடட்டூமா…?

ரோசாலி:  அம்மா… உன்ன கையெடுத்துக்‌ கும்பிடுகிறேன்‌

இந்த 42 பரீட்சையாவது எழுதுகிறேன்‌.

ஒரு 250 ரூபாய்‌ தாயேன்‌….

பரீட்சைக்கு ஃபீஸ்கட்டனும்‌.

சந்தியா:  +2 படிச்சுட்டு கலலக்டராகப்‌ போறீயாக்கும்‌.

ரோசாலி:  இல்லம்மா… டாக்டராகப்‌ போறேன்‌.

சந்தியா:  நினைப்புத்தான்‌ பொழப்பக்‌ கைடுத்திச்சாம்‌.

அந்த கதையாட்டம்‌ இருக்கு…

இந்திரா அக்கா இட்லி கடையில்‌ நானு இட்லி வாங்கிட்டு…

கடன்‌ சொல்லிட்டு வா போ…

ரோசாலி:  என்னால்‌ முடியாது நான்‌ பரீட்சைக்குப்‌ படிக்கணும்‌.

சந்தியா:  புத்தகம்‌ இருந்தா தானே…. படிப்பே…

புத்தகத்தைப்‌ பிடுங்கி… கிழித்துப்போடூதல்‌…)

ரோசாலி:  அம்மா… அம்மா… புத்தகத்தைக்‌ கிழிக்காதே…

கிழிக்காதே… முதலி

சந்தியா:  படிச்சுக்‌ கிழிச்சது போதும்‌… போ… போ….

அடுப்பங்கரைக்குப்‌ போய்‌ சோறு பொங்கு… (சல்தல்‌ி

காட்சி 2

இடம்‌ : கோயில்‌…

(மாதாவின்‌ முன்னால்‌ முழங்கால்‌ இட்டூ அழுது கொண்டே

செபிக்கிறாள்‌ ரோசாலி. பங்குத்தந்தை வருதல்‌

ப. தந்‌தை:  என்னம்மா… ரோசாலி…. பள்ளிக்கூடம்‌ போகலியா…

ஏம்மா அழுதுகிட்டு இருக்கே… அம்மா ஏதாவது
சொன்னாங்களா…?

ரோசாலி:  ஆமாம்‌ தந்‌ைத! என்னைப்‌ பள்ளிக்கூடம்‌ போகக்‌
கூடாதுன்னு சொல்லிட்டாங்க… பொட்டப்‌ பிள்ளைக்குப்‌
படிப்பு தேவையில்லையாம்‌…

அடுப்பாங்கரை வேல மட்டும்‌

பாத்தா போதுமாம்‌…

தந்‌தை:  பொட்டபுள்ள… ஆம்பளபுள்ளன்னு ஏன்‌ பிரிச்சுப்‌
பாக்கிறாங்க… இரண்டூ பிள்ளைகளுமே பத்து மாதம்‌
சுமந்து த்தது தானே…

ரோசாலி:  ஏழை புள்ளைங்க… டாக்டருக்கு படிக்க முடியாதா…!
தந்த.

தந்‌தை:  ஏன்‌ முடியாதும்மா… நீ நல்லா படிச்சு நல்ல மதிப்பண்‌
வாங்கினா… நிச்சயம்‌ முடியும்‌.

ரோசாலி:  நான்‌ டாக்டருக்குப்‌ படிப்பேன்னு ஆசைப்பட்டது தப்பா…!
தந்தை

தந்‌தை:  தப்பு… இல்லேம்மா… நீ இப்போ… பள்ளிக்கூடம்‌ போ…
நல்லா படி… போ…

ரோசாலி:  பரீட்சைக்கு ஃபீஸ்‌ கட்டணும்‌ தந்‌ைத! 250 ரூபாய்‌
கட்டணும்‌ அம்மா தர மாட்டேன்ங்கிறாங்க…

தந்‌தை:  நல்ல படிக்கிற பொண்ணு நீ! உன்னைய உங்கம்மா…
புரிஞ்சுக்கிடலியே… சரி… நான்‌ பணம்‌ தாரேன்‌…
பள்ளிக்கூடம்‌ போ…

ரோசாலி:  அமைதி

தந்‌தை:  ஏன்‌ மெளனமா… இருக்கே… ரோசாலி இந்தா… பிடி…
பள்ளிக்கூடம்‌ போ… நல்லா படி!

ரோசாலி:  (தந்‌ைத… இந்தப்‌ பணத்தை நான்‌ எப்போ…
திருப்பித்தரணும்‌.

தந்‌தை:  அது ஒண்ணும்‌ இப்போ… அவசரமில்ல… நீ நல்லா
படிச்சி… வேலைக்குப்‌ போய்‌ சம்பளம்‌ வாங்கினதும்‌
‘திருப்பிக்கொடு!

ரோசாலி:  அதுவரை… இந்தப்‌ பங்குல நீங்க இருப்பீங்களா…
தந்தை

தந்தை:  நான்‌ இல்லாட்டி என்ன…? உன்னைப்‌ போல
கஸ்டப்படுகிற பெண்ணுக்கு… படிப்புச்‌ சசலவுக்கு
நீ கொடு! அது போதும்‌!

ரோசாலி:  ரொம்ப நன்றி தந்‌ைத நான்‌ வருகிறேன்‌.

காட்சி – 3

ரோசாலி:  அம்மா… நான்‌ பாஸாயிட்டேன்‌… அம்மா நான்‌
மாநிலத்தில முதல்‌ மதிப்பண்‌ வாங்கிருக்கேம்மா

சத்தியா:  ஆமா… கிழிச்சா… முதல்‌ மார்க்கு வாங்கினதால
உனக்கென்ன கீரிடாமா கட்டப்‌ போறாங்க.
௫ர௬பர்‌ வரல்‌

நிருபர்‌:  ஆமாம்மா… உங்க மகளுக்குக்‌ கிரீடத்த விடவும்‌
பெரிய மதீப்பு கிடைச்சிருக்கு…

சத்தியா:  என்னய்யா… சொல்றீங்க…

நிருபர்‌:  உண்மைதாம்மா… அவளாள நீங்க பருமை
அடையப்‌ போறீங்க. நியை வவகுமதிகளும்‌ கிடைக்கும்‌.

சேகர்‌:  எங்களுக்கு ஒண்ணும்‌ புரியலையே ஐயா!

நிரபர்‌:  உங்க மகள நீங்க நல்லா படிக்க வைச்சதுனால
அவங்க முதல்‌ மதிப்பெண்‌ எடூத்ததனால… இனிம
அவங்க என்ன படிக்கணும்னு விருப்பப்படுகிறாங்களோ
அதைப்‌ படிக்க உதவித்‌ தொகை கிடைச்சிடும்‌.

சத்தியா:  என்‌ ராசாத்தி, படிப்பின்‌ அருமை புரியாம
உன்னை நான்‌ ॥ராம்ப தீட்டிட்டேன்‌.

ரோசாலி:  அம்மா…. பொறுமையா இருங்க. ஐயா நீங்க
சொல்லுங்க… இப்ப எதுக்கு வந்திருக்கீங்க.

நிருபர்‌:  உன்னைய நேர்காணல்‌ எடுக்கத்தான்‌ வந்தேன்‌…
சொல்லும்மா….மேற்கொண்டு நீ என்ன படிக்கப்போற.

ரோசாலி:  ஐயா… நான்‌ டாக்டருக்குப்‌ படிக்கணும்‌. மக்களுக்கு
சேவை செய்யணும்‌… இதான்‌ என்‌ விருப்பம்‌.

நிருபர்‌:  சரிம்மா உன்‌ விருப்பபடி நடக்க என்‌ வாழ்த்துக்கள்‌…
நான்‌ வர்றேன்ம்மா…

காட்சி- 4

இடம்‌ : தந்தை இல்லம்‌

(மருத்துவப்‌ படிப்பு முடிந்து ரோசாலி வீடு வருதல்‌ பபற்றோரோடு

தந்தையைச்‌ சந்திக்க வருகிறாஸ்‌

ரோசாலி: வணக்கம்‌ தந்‌ைத

தந்தை:  வணக்கம்‌, யாரு, அட நம்ம ரோசாலியா…
வாங்க வாங்க டாக்டரம்மா…

பெற்றோர்‌ :  தோத்திரம்‌ சாமி…

தந்தை:  ஆசீர்வாதம்மா… ரோசாலி என்ன படிப்பெல்லாம்‌
முடிஞ்சுருச்சாம்மா…

ரோசாலி:  ஆமா தந்தை, எல்லாம்‌ உங்க தயவால… தந்தை…
நீங்க… நல்லாயில்லையே… உங்க உடம்புக்கு

தந்தை:  ஒண்ணுமில்லம்மா… கொஞ்சம்‌ காய்ச்சல்‌ போல
இருக்கு… அதான்‌… வேறொன்றுமில்ல…

ரோசாலி:  ஐய்யய்யோ… உக்காருங்க… தந்த…
நான்‌ பார்க்கிறேன்‌…
(தந்‌ைத நல்லா காய்ச்சல்‌ இருக்கு…
(மருந்து எழுதிக்‌ காண்டே
அப்பா நீங்க வாங்கிட்டு வாங்க…

தந்தை:  ரோசாலி என்னம்மா… இது எல்லாம்‌ சரியாயிரும்‌.

ரோசாலி:  தந்‌ைத நான்‌ இன்னைக்கு ஒரு மருத்துவராவதற்குக்‌
காரணமே நீங்க தான்‌.

தந்தை:  நானா… எப்படி?

ரோசாலி:  அன்னைக்கு ஃபீஸ்‌ கட்ட நீங்க பணம்‌ தரலைன்னா,
நான்‌ +2 கூட எழுதியிருக்க மாட்டேன்‌.

சத்தியா:  உண்மைதான்‌ சாமி… படிப்பறிவு இல்லாத நான்‌ அவள
படிக்க வேண்டான்னு தடுத்தேன்‌. நீங்கதான்‌…

தந்தை:  சரி… அதல்லாம்‌ விடுங்க… ரோசாலி அடுத்து என்ன
செய்றதா எண்ணம்‌

ரோசாலி:  (தந்‌ைத… இந்தப்‌ படிப்பே எனக்குப்‌ பிறருடைய
உதவியாலத்‌ தான்‌ கிடைச்சிருக்கு. அதனால நானும்‌
என்‌ பணிய பிறர்‌ சேவையாகச்‌ செய்யப்‌ போறேன்‌.

தந்தை: புரியல ரோசாலி…

சத்தியா:  சாமி… அவ… அம்மாங்களா ஆகப்போறாளாம்‌.

தந்தை: ரோசாலி…

ரோசாலி:  ஆமா தந்தை… நான்‌ ஓர்‌ அருட்சகோதரி ஆகி
அனாதையாக இருக்கிறவங்களுக்கு இலவசமா
மருத்துவம்‌ பார்க்கப்‌ போறேன்‌.

தந்தை:  நல்லா யோசிச்சி பாத்தியா ரோசாலி…

ரோசாலி:  ஆமா தந்‌ைத இலவசமா கிடைச்ச கல்வியை என்னப்‌
போல இல்லாதவங்களுக்கு இலவசமாக அளிக்கனும்‌.
அது தான்‌ என்‌ ஆச…

சத்தியா:  ஆமாம்‌ சாமி, நான்‌ பொம்பள பிள்ளைய வீட்டுக்குள்ள
பூட்டி வைக்கணும்னு சொன்னேன்‌. அவா கல்வி அறிவு
என்னும்‌ சாவியால திறந்து வளி உலகத்துக்கு வந்து
ரக்கா… அவ விருப்பம்‌ போலவே நடக்கட்டும்‌.

தந்தை:  ரொம்ப மகிழ்ச்சி ரோசாலி

ரோசாலி:  பாதர்‌… என்னுடைய முதல்‌ மருத்துவப்‌ பணியை
உங்ககிட்ட தான்‌ தொடங்கியிருக்கேன்‌.
ஒழுங்கா மருந்து
சாப்பிடுங்க… சரியா…

தந்தை:   சரி… டாக்டரம்மா… உன்னுடைய இறைப்பணியோடு
மருத்துவப்பணியும்‌ சிறக்க என்‌ வாழ்த்துக்கள்‌. எனது
அன்பளிப்பா இந்த செபமாலையை வைச்சுக்கோம்மா…
. இது தான்‌ உனக்கு வாழ்வின்‌ துணை.

ரோசாலி : மிக்கநன்றி தந்‌ைத… வர்றோம்‌.