Sirukathaigal | பொண்ணு பார்க்க போறேன்‌ – கார்‌

Categories சிறுகதைகள்Posted on
Sirukathaigal-ponnu parkka poren-car‌
Share with :  

19. பொண்ணு பார்க்க போறேன்‌…

கார்‌ வந்து நின்றது.

சிறுவன்‌ ராஜேஷ்‌ உள்ளே ஓடி
வந்தான்‌… அத்தை… அத்தை…உங்கள
பொண்ணு பார்க்க மாப்பிள்ளை மாமா

வந்துட்டார்‌..ர்‌…்‌.. என்றான்‌.

ஜெயா முகம்‌ சிவந்தாள்‌…ஏநஞ்சு பட
படத்தது… உடம்‌வபல்லாம்‌ ரத்த ஓட்டம்‌
அதிகரித்து… நிலை கொள்ளாத பார்வை
அங்கும்‌ இங்கும்‌ அலை பாய்ந்தது…
கதவின்‌ பின்னால்‌ ஒளிந்தாள்‌.

அப்பாவும்‌ அண்ணனும்‌ மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பதற்கு…
வாசலை நோக்கி ஓடினார்கள்‌. அம்மா…அடுக்களையில்‌ இருந்து ஓடி
வந்து எட்டிப்பார்த்தாள்‌.

“ஏன்‌ டி… பெண்னை ரெடி பண்ணியாச்சா…” ஆமாம்‌… அத்தை! வபண்‌
ஓ…கே! என்றாள்‌ வீட்டுக்கு வந்த மருமகள்‌ சேசுராணி

“எலிசபெத்‌…எங்கே?”

“அதோ…நிலைக்‌ கண்ணாடி முன்னால்‌ நிக்கிறாள்‌”…

எலிசபெத்‌….ஜெற்றிக்குப்‌ பொட்டிட்டு, கண்ணுக்கு மையிட்டு… கன்னத்தில்‌
வழிந்த பவுடரைத்‌ துடைத்துக்‌ கொண்டிருந்தாள்‌.

ஏய்‌… எலிசபத்‌… ஏன்டி அரைமணி நேரமா நீலைக்கண்ணாடி
முன்னால்‌ நிக்கிறே… உன்னையா பெண்‌ பார்க்க வாறாங்க… உன்‌

அக்காவைத்தானே”… என்று கிண்டலடித்தாள்‌ சேசுராணி.
“போங்கண்ணி…உங்களுக்கு ஒன்றும்‌ தரியாது… மாப்பிள்ளை கூட
அவன்‌ தம்பி வருவான்‌ இல்ல… அவன்‌ லுக்வுடூற மாதிரி நான்‌ இருக்க

வேண்டாம்‌…”

“வாயாடி…வாயாடி….வாயைக்‌ கொஞ்சம்‌ அடக்கிப்‌ பேசுடி…” என்றாள்‌
சேசுராணி.

“ஏய்‌…எலிசலபத்‌ இங்கே வாடி…” அம்மா கூப்பிட்டாள்‌.

எலிசபத்‌ வந்து நின்றாள்‌. அவளை முழுவதுமாகப்‌ பார்த்தாள்‌.
எலிசபத்‌ அழகாக இருந்தாள்‌… எஜயாவை விட கலர்‌ கொஞ்சம்‌
தூக்கலாகவே தெரிந்தது. முகம்‌ சற்று உப்பலாக வட்ட நிலவாக இருந்தது.
அளவான அமைப்பில்‌… இளமை துள்ளும்‌ பருவத்தின்‌ வாசலில்‌ புத்தம்‌
புதிய ரோஜாவாக நீன்றாள்‌.

“எலிசபத்‌ நீ ஜயா கூட வரவேண்டாம்‌… அண்ணி 6ஜயாவைக்‌ கூட்டி

வருவாள்‌…”

“ஏம்மா… எனக்கு மட்டும்‌ மாப்பிள்ளையைப்‌ பார்க்க ஆசையிருக்காதா…?”

“சொன்னா… கேளுடி…நீ வர வேண்டாம்‌ வந்தால்‌…வாயாடி காரியத்தைக்‌
கெடுத்து விடுவாய்‌… அம்மா கண்டிப்பாகச்‌ சொன்னாள்‌”.

“ஏன்‌… அத்தை, வந்தால்‌ வந்துட்டு போகட்டுமே… இவ்வளவு கஷ்டப்பட்டு
அவள்‌ மேக்கப்‌ போட்டிருக்கிறாள்‌…” என்றாள்‌ சேசுராணி.

“அப்படின்னா… ஒண்ணு பண்ணு… உன்‌ சேலையை அவிழ்த்துவிட்டு…
அரைத்தாவணி கட்டிட்டு வா… என்றாள்‌ அம்மா”.

“சரியம்மா… என்றவள்‌ சேலையை அந்த இடத்திலே இடையில்‌ இருந்து

உருவினாள்‌”.

“பாட்டி இங்கே பாருங்களேன்‌ அத்தையை…. ஷேம்‌…ஷேம்‌…” என்றான்‌.
சிறுவன்‌ ராஜேஷ்‌.

போடா…ஏபெரிய மனுசா… அவனை அடிப்பது போல கையை ஓங்கினாள்‌.
அவன்‌ கண்ணை மூடிக்‌ கொண்டே ஓடிவந்து பாட்டியைக்‌ கட்டிப்‌ பிடித்துக்‌
கொண்டான்‌. எல்லாரும்‌ சிரித்துக்‌ கொண்டார்கள்‌.

ஹாலில்‌ உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை வீட்டாரும்‌ பெண்‌ வீட்டாரும்‌ பேச
வேண்டியதை எல்லாம்‌ பேசிமுடித்து விட்டூ… பண்ணைக்‌ கூட்டிட்டு வரச்‌
சொல்லுங்க என்றார்கள்‌.

ெயா…. எமதுவாக அன்னம்‌ போல… கால்‌ பார்த்து நடந்து வர…
தொடர்ந்து வந்தாள்‌ எலிசபத்‌. காபி… பலகாரங்கள்‌ சூடாகப்‌
பரிமாறப்பட்டன.

“அக்கா…. மாப்பிள்ளையைப்‌ பாரேன்‌…

உன்னை விழுங்கி விடுவது போல… பார்க்கிறார்‌…” என்று ஜெயாவின்‌
காதில்‌ முணு முணுத்தாள்‌ எலிசபத்‌.

“போடி…” எவட்கம்‌ அவளைப்‌ பிடுங்கித்‌ தின்றது.

பண்ணைப்‌… பிடித்திருக்கிறதா…? கல்யாணத்தை எப்போ
வைச்சுக்கலாம்‌… மெதுவாகப்‌ பேச்சை ஆரம்பித்தான்‌ ஜயாவின்‌
அண்ணன்‌ ஸ்டீபன்‌.

“அம்மா… இப்படி வாயேன்‌…” என்று மாப்பிள்ளை கூப்பிட…

மாப்பிள்ளையும்‌ மாப்பிள்ளை அம்மாவும்‌ தனியாகச்‌ சென்று சிறிது நேரம்‌
பேசிவிட்டு வந்தார்கள்‌.

“எனக்கு…. உள்ளே ஒண்ணு வைச்சு… வளியே ஒண்ணு பேசத்‌
ஒதரியாது…. கல்யாணத்திற்கு நாள்‌ குறிக்கலாம்‌… ஆனா…” என்று
இழுத்தாள்‌ மாப்பிள்ளை அம்மா லூர்தம்மாள்‌.

“ஆனா… சொல்லுங்கம்மா… எதுவானாலும்‌ சொல்லுங்க… என்று
கேட்டான்‌ ஸ்டீபன்‌”.

“பையனுக்கு உங்க இளைய பெண்ணைத்தான்‌ பிடிச்சிருக்காம்‌…”

பெண்‌ வீட்டாருக்கு இடி விழுந்தது போல்‌ இருந்தது… யாருமே இதை
எதிர்பார்க்கவில்லை… ஒரு கணம்‌ உலகம்‌ நின்று சுழன்றது.

அமைதி… அமைதி…

“என்ன… பேசாமலிருக்கீங்க… தாம்பூலத்‌ தட்டை மாத்திக்கலாமா…?”
மாப்பிள்ளை அம்மாள்‌ கேட்டாள்‌.

திடீரென்று விழித்துக்‌ காண்டாள்‌ எலிசபத்‌ “ஓ….கே… தாம்பூலத்‌ தட்டை
மாத்திக்கலாம்‌… ஆனா…. ஒரு கன்டிஷன்‌…”

“என்ன…. கன்டிஷன்‌…” லூர்தம்மாள்‌.

“நான்‌ தயார்‌… ஆனா….. மாப்பிள்ளை… உங்க இளைய மகனாக
இருக்க வேண்டும்‌…”

மாப்பிள்ளை வீட்டார்‌ அதிர்ந்தார்கள்‌.

“நீ என்னம்மா… விளையாடுறியா… நாங்க பெண்ணு பார்க்க வந்தது
என்‌ மூத்த பையனுக்குத்‌ தான்‌…” என்றார்‌, மாப்பிள்ளை தகப்பனார்‌.

“நாங்க மாப்பிள்ளை பார்த்ததும்‌ என்‌ அக்காவுக்குத்தான்‌” என்றாள்‌
எலிசபத்‌.

“வேணும்னே…. மாப்பிள்ளைப்‌ பையனை இன்சல்ட்‌ பண்ணுறியா…”
மாப்பிள்ளை உறவினர்‌.

“நீங்க மட்டும்‌ என்ன யோக்கியம்‌ வளியே… போங்க…” கத்தினாள்‌
வாயாடி எலிசபெத்‌.

மாப்பிள்ளை வீட்டார்‌ எல்லாரும்‌ தலையைத்‌ தொங்க போட்டுக்‌
கொண்டு வாசலை நோக்கிச்‌ சென்றார்கள்‌. வாசலில்‌ மறித்து ஒரு துண்டுச்‌
சீட்டைமாப்பிள்ளை கையில்‌ கொடுத்தாள்‌ எலிசபெத்‌.

அதில்‌ “காபி… பலகாரச்‌ செலவு ஐநூறு” என்று எழுதப்பட்டிருந்தது…
பைக்குள்‌ கையிட்டூ ரூபாயை எடுத்துக்‌ கொடூத்து விட்டு அவமானமாக
வெளியே சென்றான்‌ மாப்பிள்ளை.

“இது உங்களுக்கு அபராதம்‌” என்று சொல்லிக்‌ காண்டே உள்ளே
வந்தாள்‌ வாயாடி எலிசபத்‌.

மாதாவின்‌ படத்தின்‌ முன்‌ நீன்று. அழுது கொண்டிருந்த அம்மா…
எலிசபத்தைப்‌ பபருமையுடன்‌ அணைத்து கொண்டாள்‌.