Sirukathaigal | மலர்ந்தும்‌ மலராத – மாதா

Categories சிறுகதைகள்Posted on
sirukathaigal-malarnthum‌ malaratha-matha
Share with :  

1.  மலர்ந்தும்‌ மலராத

மாதா கோவிலில்‌ துக்க

 

மணி விட்டு விட்டு அடித்தது.

மும்பையிலிருந்து குடும்ப சகிதமாய்‌
அப்போதுதான்‌ வந்திறங்கிய சேசு துரை….
கவனித்து கேட்டார்‌.

“மரிய ரோசா பாட்டி செத்தீட்டாங்களாம்‌…”

போனது அவரது காதில்‌ இடிவயன
இறங்கியது.

“என்ன…. மரிய ரோசா செத்திட்டாளா….!’ தனக்கு தானே முணு
முணுத்துக்‌ கொண்டார்‌. “நான்‌ வரட்டும்‌ என்று தான்‌ உயிரை பிடித்துக்‌
கொண்டு இத்தனை நாளும்‌ காத்தீருந்தாளா…’

“என்னங்க… அப்படியே நிக்கிறீங்க…. டிஷஸ்ஸை மாத்துங்க…”
மனைவி உசுப்பி விட துணியை மாத்தீக்‌ கொண்டு வளியே வந்தார்‌.

“வபரியப்பா….உங்களுக்கு குளிப்பதற்கு சுடுதண்ணி போட்டுக்‌
வைச்சிருக்கேன்‌…” தம்பி மகள்‌ சுதா.

“சற்று பொறும்மா… வளியே போயிட்டு வந்து குளிக்கிறேன்‌”.

மட மட ஒவன்று வளியே வந்து தெருவில்‌ நடந்தார்‌… தெப்பகுளம்‌…
மாதா கோவில்‌ தாண்டி மரிய ரோசா வீட்டுக்கு சென்றார்‌.

அதே குடிசை வீடூ.. அதே நட்டூத்திண்ணை.. நார்கட்டிலில்‌
கிடத்தப்‌ பட்டிருந்தாள்‌ ரோசா.

சுற்றி நான்கைந்து பபண்கள்‌ கடமைக்கு ஒப்பாரி வைத்துக்‌
கொண்டிருந்தார்கள்‌. இவரைக்‌ கண்டதும்‌ ஒன்றிரண்டு பேர்‌ விலகி இடம்‌
கொடுத்தனர்‌. ஒப்பாரி காணாமல்‌ போயிருந்தது.

மரிய ரோசாவைப்‌ பார்த்தார்‌… புத்தம்‌ புது ரோஜா போல்‌ நையாண்டி
பேசி சிரிக்கும்‌ முகமா இது! சுருக்கங்களுடன்‌ வெளுத்து கம்பிக்‌ கிடந்தது.
உடல்‌ மெலிந்து வறுமையின்‌ பிடியில்‌ சிக்கி வரிகளாக மாறிப்‌ போய்‌ கிடந்தது.
‘தலைமுடியல்லாம்‌ நரைத்து நரைகளாகியிருந்தன. உற்றார்‌, உறவினர்‌
யாருமின்றி தனியாக கிடத்தப்பட்ட அவளின்‌ ஒரே உறவான பூனைக்குட்டி
ஒன்று மட்டும்‌ அவள்‌ தலை மாட்டில்‌ நின்று அவளையே பார்த்துக்‌
கொண்டு முணுமுணுத்துக்‌ கொண்டிருந்தது.

ரோசா…. உனக்கும்‌, எனக்கும்‌ வயதாகி விட்டது… ஆனால்‌ நம்‌
காதலுக்கு…!

நினைவில்‌ பின்னோக்கிப்போனார்‌ சேசுதுரை.

சைக்கிளை உருட்டிக்கொண்டு மரிய ரோசா வீட்டூ முன்‌ நிறுத்தினான்‌
சேசுதுரை.

“என்னங்க… வீட்ல யாருமில்லையா…?” “அப்பா.. பனை
ஏறப்போயிருக்கு…” இனிமையான குரல்‌ ஒன்று வந்தது.

“எனக்கு கொஞ்சம்‌ பம்பு வேணுமுங்க… சைக்கிளுக்கு காத்தடிக்கணும்‌…”

“பம்பு எல்லாம்‌ எகாஞ்சமா கொடுக்க முடியாதுங்க…” கிண்டல்‌ பேச்சு
அவனை தீணறடித்தது.

“டவுனுக்கு போகணுமுங்க…. காத்தடிக்கணும்‌”.

“இந்தாங்க…” இரண்டூ வாழைத்தண்டூ கைகள்‌ மட்டூம்‌ நீண்டு பம்பை
கொடுத்தன…

பம்பை வாங்கி சைக்கிள்‌ மவுத்தில்‌ ட்யூபை சொருகி காத்தடித்தான்‌….
டியூப்மவுத்திலிருந்து வளியே வந்தது….இப்படி இரண்டூ மூன்று தடவை

சொருகி அடித்துப்‌ பார்த்தான்‌. காற்று ஏறவில்லை பிடிப்பதற்கு யாராவது
வருகிறார்களா என்று திரும்பிப்‌ பார்த்தான்‌…

கதவுக்கிடையில்‌ ஒளிந்திருந்து பார்த்துக்‌ காண்டிருந்த ரோசா,
வெளியே வந்து அவனுக்கு உதவினாள்‌.

காற்று அடித்ததும்‌ அவன்‌, “போயிட்டு வாரேன்ங்க…” என்றான்‌.

“வேண்டாம்‌… போயிட்டு இங்கே வராதீங்க… உங்க வீட்டுக்கு போங்க…”

மீண்டும்‌ கிண்டல்‌. மனதுக்குள்‌ ரசித்துக்‌ ககாண்டான்‌.

சைக்கிளை தள்ளிக்‌ கொண்டு போனான்‌.

“ஏன்‌ சைக்கிள்‌ ஏறத்‌ தெரியாதா..?” க்ளுக்‌ கென்று சிரித்தாள்‌ ரோசா.

அவனுக்கு ரோசம்‌ பொத்துக்‌ கொண்டு வந்தது. சைக்கிளின்‌ படலை
மிதித்து ஏறாமல்‌… ஓடிச்சசன்று கால்களை விரித்து ‘ஜம்ப்‌’ பண்ணி ஏறிய
வன்‌…. பெருமிதத்தோடூ அவளை திரும்பி பார்த்துக்‌ கொண்டே போனான்‌.

ஒத்த பனை சந்தியில்‌ இருந்து அன்று நடந்து வந்து கொண்டிருந்தாள்‌
ரோசா.

சேசுதுரை பின்னால்‌ சைக்கிளில்‌ வந்தவன்‌ சைக்கிளை நிறுத்தினான்‌.

“ஏறிக்கோ….” மரியாதை காணாமல்‌ போயிருந்தது.

அவள்‌ தயங்கினாள்‌.

“சும்மா ஏறு!… எனக்கு சைக்கிள்‌ ஓட்டத்‌ ஒதரியும்‌” என்றான்‌, சிரித்துக்‌
கொண்டே.

ஏறினாள்‌

“ரோசா…”

“நீ என்ன பவுடர்‌ போட்டிருக்கே…. வாசம்‌ கம்முன்னு தூக்குதே!”

“எங்கண்ணன்‌ கேரளாவுல இருக்கில்ல… அங்கிருந்து கொடுத்து
விட்டுச்சு…”

“அடுத்த மாசம்‌ பரிய படிப்பு படிக்க டவுணுக்கு போவேன்‌…. அது
என்ன பவுடர்ன்னு சொன்னியன்னா… அங்கிருந்து வாங்கீட்டு வருவேன்‌
உனக்கு…

மவுனம்‌.

“என்ன ரோசா…மவுனமாயிட்டே…. நான்‌ பவுடர்‌ வாங்கிட்டூ வந்தா…. நீ

வாங்க மாட்டியா… என்ன பவுடர்‌ வேணும்‌?”

“உங்க இஸ்டத்துக்கு வாங்கிட்டு வாங்க….” எமல்லிய குரலில்‌
நாணத்தோடு சொன்னாள்‌.

“ரோசா…. நான்‌ ஒண்ணு சொல்லட்டுமா?”

“சொன்னாக்‌ கேளு. சேலையை கட்டேன்‌”

அவன்‌ வார்த்தை புரிந்தவள்‌ கொஞ்சம்‌ கூச்சமாகி தன்னையறியாமலே
முந்தானை தலைப்பை இழுத்து விட்டுக்‌ கொண்டாள்‌.

“சரி… ஊரு வந்துட்டு என்னை இறக்கி விடுங்க…”

இறக்கி விட்டான்‌.

“சாயங்காலம்‌ வீட்டு பக்கம்‌ வாங்க…” என்றவள்‌ வேகமாக நடந்தாள்‌.

பெட்டிக்குள்‌ இருந்த அம்மாவின்‌ சேலையை சுத்தீக்‌ கொண்டு கண்ணாடி
முன்‌ நின்றாள்‌ ரோசா. சேலையை சுத்துவது அவளுக்கு கஷ்டமாய்‌
இருந்தது. சரியாக வரல… மீண்டும்‌…. மீண்டும்‌ சுற்றிக்‌ ககாண்டு நின்றாள்‌.

சேலையோடு போராடும்‌ மகளைப்‌ பார்த்து பால்ராஜ்‌ சிரித்துக்‌ கொண்டார்‌.

“என்னம்மா…. கல்யாண ஆச வந்துட்டா…”

“போங்கப்பா…” நாணத்தால்‌ சிவந்தாள்‌. “புடவை எனக்கு
நல்லாயிருக்காப்பா”

“ஏாம்ப அழகா இருக்கும்மா…”

“அப்பா…”

“என்னம்மா….”

“இன்னைக்கு சாயங்காலம்‌ மாலைப்‌ பதனியும்‌ நுங்கும்‌ காண்டு

உட ர
வாங்கப்பா…

“சரியம்மா…”

அன்று மாலையில்‌ சேசுதுரை வந்தான்‌.

அவள்‌ சேலை கட்டியிருப்பதை பார்த்ததும்‌ பிரமித்தான்‌. தனக்குள்‌
சந்தோஷப்பட்டுக்‌ கொண்டான்‌.

“நான்‌ சேலையில்‌ எப்படியிருக்கேன்‌?”

“அழகா… ரொம்ப அழகா இருக்கே… ம்‌.. பத்மினி மாதீரி இருக்கே…”

அவள்‌ மகிழ்ந்து போனாள்‌.

“நான்‌ டவுனுக்கு போயிட்டு வரும்‌ போது” உனக்கு சேலை
வாங்கிட்டு வாரேன்‌. ரோசா…!

“சரி… நுங்கு போட்ட பதனி குடியுங்க… உடம்புக்கு நல்லது…”

இப்படித்தான்‌ அவர்கள்‌ காதல்‌ நாஎளாரு மேனியும்‌ பாழுஒதாரு
வண்ணமுமாக… கைப்படாமல்‌ வளர்ந்தது.

படித்து விட்டு வேலைக்கு போனவன்தான்‌ சேசுதுரை. அவனுக்காக

காத்திருந்தாள்‌ மரியரோசா… நாற்பது வருடம்‌ கழித்து இப்போது குடும்ப
சகிதமாய்‌ மும்பையிலிருந்து வந்திருக்கார்‌ சேசுதுரை.

(தட தடவவன்று ஊர்‌ பெரியவங்க உள்ளே வந்தனர்‌.

“நாளை மறுநாள்‌ புத்தாண்டு! ஆக வேண்டிய காரியங்களை சீக்கிரம்‌
பார்க்கணும்‌” என்றார்‌ ஒருவர்‌.

“மேலே போடுவதற்கு புது துணி ஏதாவது பெட்டியில்‌ இருக்கான்னு பார்‌”
முதியவர்‌ ஒருவர்‌ கட்டளையிட, கட்டி தொங்கவிடப்பட்ட ஒலைப்‌வபட்டியை
எடுத்து பிரித்தான்‌ இளைஞன்‌ ஒருவன்‌.

அங்கிருந்த ஒரு சேலையை எடுத்து மரிய ரோசாவின்‌ மேல்‌… மூடலாக
போட்டான்‌.

பளீஏரன நெஞ்சை தாக்கியது சேசு துரைக்கு… ஆம்‌… அவர்‌ அவளுக்கு
நாற்பது வருசத்துக்கு முன்னால்‌ எடுத்துக்‌ கொடுத்து புடவை அது… அதை
அப்படியே பட்டியில்‌ வைத்திருக்கிறாள்‌… கட்டவேயில்லை…. அந்த
இளைஞன்‌ அந்த பெட்டியிலிருந்து ஒரு பவுடர்‌ டப்பாவை எடுத்து… அவள்‌
மேல்‌ தூவினான்‌. அதுவும்‌ அவர்‌ வாங்கிக்‌ கொடுத்ததுதான்‌.

அவள்‌ பிணத்துக்காக நான்‌ ஆசையோடூ இவைகளை வாங்கிக்‌
கொடுத்தேன்‌… நெஞ்சு விம்மியது.. கண்ணீர்‌ வபருக்கெடுத்து… யாருக்கும்‌
தெரியாமல்‌ துடைத்துக்‌ கொண்டார்‌.

“சரி… இவளுக்ககன்று சொந்த பந்தலமல்லாம்‌ யாரும்‌ இல்லியே…
செலவழிக்கிறது யார்‌?” ஊர்ப்‌ பெரிசுகள்‌ ஆரம்பித்தார்கள்‌.

“ஆமாம்‌… ஆனாதை பிணம்‌ என்ற முறையில்‌ பங்கு சாமியாரிடம்‌
பணம்‌ கேட்கலாம்‌” ஒருவர்‌ முந்திக்‌ ககாண்டு சொன்னார்‌.

விழித்துக்‌ காண்டார்‌ சேசுதுரை. ‘என்‌ ரோசா… அனாதையா…! இல்லை..
இல்லவே இல்லை…’ தன்‌ பைக்குள்‌ கைவிட்டு பத்தாயிரம்‌ ரூபாயைத்‌
தூக்கி ஊர்த்‌ தலைவரிடம்‌ கொடுத்தார்‌.

“நீங்க ஏங்க தனியா செலவழிக்கணும்‌….?”

“பரவாயில்லை… எசலவழியுங்க…. கொடுத்தார்‌”.

“சரி… சீக்கிரம்‌ எல்லா ஏற்பாடுகளையும்‌ செய்யுங்கள்‌…” என்றார்‌
ஊர்த்தலைவர்‌.

பெண்கள்‌ கூட்டம்‌ உள்ளே நுழைய,வீடூ ஒநரிசலானது. யாருக்கும்‌
தெரியாமல்‌…. எமதுவாக மரிய ரோசாவின்‌ கால்களை தொட்டார்‌ “என்னை
மன்னிச்சிடு ரோசா…” காதலின்‌ முதல்‌ ஸ்பரிசம்‌ இது.

காரியங்கள்‌ வவகுவாக நடந்தன. தூக்கிக்‌ எசன்றார்கள்‌ ரோசாவை…

ஒரு கணம்‌… பூமியே தலை கீழாக சுற்றுவது போல்‌ இருந்தது.
நஞ்சு துடிக்க மறந்தது. கண்களில்‌ பார்வையில்லை… தட்டு தடுமாறிய
அவர்‌…. மரச்சட்டத்தில்‌ சாய்ந்து கொண்டார்‌.

“மியாவ்‌…’ பூனைக்‌ குட்டியின்‌ குரல்‌ அவர்‌ கவனத்தை திருப்பியது. ரோசா
வளர்த்த பூனை. ரோசாவின்‌ ஞாபகமாய்‌ பூனைக்குட்டியை தூக்கிக்‌ ககாண்டு
கனத்த இதயுத்தோடு நடந்தார்‌.