Tamil Siru Kathaigal | ரோசாப்பூ – கன்னி

Categories சிறுகதைகள்Posted on
Tamil siru kathaigal-rosappu-kanni
Share with :  

17. ரோசாப்பூ

கன்னி
மீண்டும்‌ புரண்டூ படுத்தாள்‌.
“ஏன்‌ தாயீ… உடம்பு நோவுதா?”

1: சிம்னி விளக்கில்‌ கூடை முடைந்திருந்த
| தாத்தா கேட்டார்‌.

“இல்ல….தாத்தா!”

“வயல்‌ வேல கஸ்டமாயிடுச்சா தாயி!”

“அல்லாம்‌ இல்ல தாத்தா”

“பின்ன என்ன மத்தன்னிக்கல்லாம்‌ படுத்ததும்‌ உறங்கிடுவே…”

“சரி தாத்தா…. நீ உறங்கலியா….?”

“எனக்கு எங்கே உறக்கம்‌ வருது…. உன்‌ அப்பனும்‌ ஆயிம்‌ போன
பிறவு எனக்கு உறக்கமே விட்டூ போச்சு தாயி! உன்ன ஒருத்தன்‌ கையில
பிடிச்சு கொடுத்தாத்தான்‌ எனக்கு உறக்கம்‌ வரும்‌….”

“பிடிச்சு கொடுக்க துட்டு எம்புட்டு வைச்சிருக்கே தாத்தா…”

உன்‌ அழகுக்கும்‌ அறிவுக்கும்‌ துட்டு எதுக்கு தாயீ! எங்கேயாவது
சீமையிலிருந்து ஒருத்தன்‌ வந்து உன்ன கொத்தீட்டு போயிட மாட்டானக்கும்‌!

கன்னி சென்டி மீட்டரில்‌ சிரித்துக்‌ காண்டாள்‌.

கன்னி…. கண்ண மூடினாள்‌.

உறக்கம்‌ வரலை… முத்துதான்‌ கண்ணுக்குள்‌ வந்து நின்றான்‌.
தொடர்ந்து நானு நாளா அவளை கூப்பிட்டூ பார்த்தான்‌. கன்னி அவனுக்கு
பதீலேதும்‌ தரலை.

அன்று-

கன்னி வயல்‌ வேலைக்கு புறப்பட்டு போகும்‌ போது அந்த பொத்தையடி
பாறையின்‌ நீழலில்‌ ஒதுங்கினாள்‌.

ஜில்லென்னு காத்து வீசியது. மஞ்சளா டூத்து கிடக்கும்‌ மூக்குத்தி பூக்கள்‌
பார்க்க ரம்மியமாக இருந்தது. நடுவே ஒரு ஒத்தை ரோசா செடி வளர்ந்து,
மொட்டு அரும்பி நின்றது.

ரோசா செடியைப்‌ பார்த்ததும்‌ கன்னி மனசுக்குள்‌ ஒரு குளிர்ச்சி.
ரோசாப்‌ பூ என்றால்‌ அவளுக்கு கொள்ளை ஆசை.

கணக்கா பிள்ளை மகள்‌ சரோஜா தீனமும்‌ ஒரு ரோசாப்பூவை வைச்சிட்டு
பள்ளிக்கூடத்துக்கு போவதை கன்னி கண்‌ கொட்டாமல்‌ பாத்திருக்காள்‌.

“தினசரி உனக்கு ரோசாப்பு எங்கிட்டு கிடைக்கு” ன்னு சரோஜா கிட்ட ஒரு
நாள்‌ கேட்டாள்‌.

“பூக்காரி கொண்டு வருவா…. ஒரு பூ ஏெண்டு ரூபா…” ன்னு சொல்லிட்டு
போயிட்டாள்‌.

“அம்மாடியோவ்‌, இரண்டு ரூபாயா…” கன்னி சுரமிழந்து போயிட்டா.
இரண்டூ ரூபா கொடுத்து நாம என்னிக்கு ரோசாப்பூ வாங்கி தலையில்‌
வைக்க!

இந்த மொட்டு பூவிட நாளு நாளாகும்‌ மனசுகுள்ள கணக்கு போட்டூ
பார்த்தாள்‌. இந்த பூவ பறிச்சு தலையில வைச்சிட்டு ஒரு நட மாடத்தியம்மன்‌
கோயில்‌ வரபோயிட்டு வரணும்‌. நினைப்பே குளிர்ச்சியா இருந்திச்சு.

ம்‌ ர

கன்னி…
திரும்பி பார்த்தாள்‌. முத்து ஒற்றை காலை தரையில்‌ ஊன்றி கொண்டு
சைக்கிளில்‌ நின்று கொண்டிருந்தான்‌.
“சைக்கிளில்‌ வாறியா கன்னி… வயக்காட்டூல உன்ன விட்டூட்டு போறேன்‌”
அவள்‌ பதில்‌ ஏதும்‌ பேசவில்லை. மமளனமாக நீன்றாள்‌.
கொஞ்சம்‌ நேரம்‌ அவன்‌ நீன்று பார்த்து விட்டு போயிட்டான்‌.
இப்படியே…
இரண்டு…
மூன்று…

நான்கு நாட்களாக அவன்‌ அவள கேட்டுப்‌ பார்த்தான்‌. அவள்‌
மெளனத்தையே அவனுக்கு பதீலாக தந்தாள்‌.

முத்து அழகாகத்தான்‌ இருக்கும்‌. பஞ்சாயத்து டீவியில்‌ வர்ற
நெப்போலியன்‌ மாதிரி நல்ல உசரம்‌, அரும்பு மீச, மேஸ்தீரி வேல பாக்குது.
நல்ல சம்பளம்‌, ஒத்தைக்‌ கோர்‌ புள்ள. கெட்ட பழக்கம்‌ இல்ல…

கன்னி மனசுல தீரும்ப தீரும்ப வந்து முத்து காயப்படுத்தினான்‌….ம்‌…
நாளக்கி கூப்பிட்டா… சைக்கிள்ல போயிட வேண்டியதுதான்‌. அந்த
ரோசாப்பூவை பறிச்சி வைச்சுகிட்டு முத்து கூட போனா…. எப்படியிருக்கும்‌?
சுகமாக இருந்தது கன்னிக்கு! அப்படியே தூங்கி போனாள்‌!

காலையில்‌ எழுந்தாள்‌…

கால்வாய்க்கு குளிக்க போனாள்‌ தலைக்கு ஷாம்பு….முகத்துக்கு
மஞ்சள்‌… உடம்புக்கு சோப்பு போட்டு குளித்தாள்‌.

அவளுக்கு பிடித்தமான அந்த மஞ்சள்‌ நீற தாவணியை பெட்டிக்குள்‌
இருந்து எடுத்தாள்‌. அதுக்கு ஜோடியான சரிகை பார்டர்‌ போட்ட
ரவிக்கையும்‌ எடுத்து உடுத்தீனாள்‌.

சிறிய கண்ணாடி ஒன்று சசெருவையில்‌ தொங்கி கொண்டிருந்தது.
அதன்‌ முன்னே நின்னு தலையை வாரி, பின்னி விட்டூ சட்டத்தில்‌
ஒட்டியிருந்த கருப்பு பாட்டை நெத்தியில்‌ ஒட்ட வைத்தாள்‌.

முகம்‌ மஞ்சள்‌ துண்டூ மாதிரி நல்ல அழகா இருந்தது. கண்ணாடியை
சற்று கீழே இறக்கி பார்த்தாள்‌. இளமையின்‌ அழுத்தத்தால்‌ ரவிக்கையின்‌
மேல்‌ கொக்கி காணாமல்‌ போயிருந்தது. ஒரு ஊக்கை எடுத்து குத்தீ மேலும்‌
அதை உறுதியாக்கினாள்‌. தாவணியை ஒழுங்கு படுத்தீட்டு வேலைக்கு
புறப்பட்டாள்‌.

“ஏன்‌ தாயீ… இன்னிக்கு பெட்டி துணியை எடுத்து உடுத்திருக்கே!”
“மத்தததல்லாம்‌ அழுக்கா கிடக்கு தாத்தா…. நான்‌
வாரேன்‌…”

நடந்து கொண்டிருந்த கன்னி… திரும்பி, திரும்பி பார்த்து காண்டே
போனாள்‌.

மூத்து இன்னும்‌ வரலையே!

தூரத்துல முத்து சைக்கிள்ல வர்ரது தெரிஞ்சது…
அவள்‌ நஞ்சு… பக்‌… பக்‌… பக்‌… இனி…. கன்னி திரும்பி பார்க்க

வில்லை.

இதோ….
இதோ…
இதோ…

வந்து விட்டான்‌…. கன்னியை கூப்பிடுவான்‌…

அவன்‌ சைக்கிள்‌ அவளை கடந்து வேகமாக போய்க்‌ கொண்டிருந்தது.

அவள்‌ எட்டிப்‌ பார்த்தாள்‌.

முத்து சைக்கிளின்‌ பின்னால்‌… கந்தசாமியோட மகள்‌ ராஜாத்தி இருந்தாள்‌.
இருவரும்‌ சிரிச்சு பேசிக்கிட்டே போய்கிட்டு இருந்தார்கள்‌.

திரும்பி பார்த்தாள்‌.

அந்த ஒற்றை ரோசாவை காணவில்லை. இவளுக்கு முந்தி யாரோ
பறிச்சுகிட்டு போய்‌ விட்டிருந்தார்கள்‌… இவள்‌ பிந்திவிட்டாள்‌.

கன்னி… மீண்டும்‌ மளனமானாள்‌.