Siru kathai in tamil | கடிதம் – சிற்றுந்து

Categories சிறுகதைகள்Posted on
Siru kathai in tamil-kaditham-sitrunthu
Share with :  

10. கடிதம்

காலை மணி 8.05

சிற்றுந்து (மினி பஸ்க்காகக்‌ காத்திருந்தாள்‌ வின்சி. தினசரி அந்த
கிராமத்திலிருந்து திசையன்விளைக்குப்‌ போகும்‌ வாடிக்கையாளர்களுள்‌
அவளும்‌ ஒருத்தி. கணினி பாடம்‌ படிக்கிறாள்‌.

அந்த நடத்துநரின்‌ முகம்‌ அவளுக்குப்‌ பரிச்சயமான ஒன்று!
ஞாயிற்றுக்கிழமைகளில்‌ மாதா கோயிலில்‌ பாத்திருக்கிறாள்‌. அவனது
கனிவான பேச்சும்‌ சிரிப்பும்‌ அவளை ஒவகுவாகவே கவர்ந்தது! அதுவே
அவள்‌ மனதில்‌ அரும்பாகி, காதலாக மலர்ந்தது!

‘இதை அவனிடம்‌ எப்படித்‌ தெரிவிப்பது? இன்றுதான்‌ அந்த முடிவை
எடுத்தாள்‌. அவள்‌ எண்ணத்தை இரண்டூவரி கவிதையாக எழுதி பத்து
ரூபாய்‌ நோட்டூக்குள்‌ மறைத்து வைத்து…. பயணச்சீட்டு எடுக்கும்போது
கொடுத்துவிட வேண்டும்‌.

சிற்றுந்து வந்தது… ஏகப்பட்ட கூட்டம்‌. நரிசலில்‌ ஏறினாள்‌.

கூட்டத்தில்‌ வளைந்து ஏநளிந்து அவன்‌ டிக்கட்‌ கொடுக்கும்‌ அழகைக்‌
கவனித்தாள்‌.

கையில்‌ பத்து ரூபாயும்‌ கடிதமும்‌ படபடத்துக்‌ கொண்டிருந்தன.

‘இவள்‌ பக்கமாக வந்தான்‌, “தங்கச்சி டிக்கட்‌ எடுத்திட்டியா…?”

பத்து ரூபாயை மட்டும்‌ கொடுத்து டிக்கட்‌ எடுத்தாள்‌ அன்புத்‌ தங்கை
வின்சி.