Siru kathai in tamil | வியாபாரம்‌ – ராஜ்‌

Categories சிறுகதைகள்Posted on
Siru kathai in tamil-viyabaram‌-raj‌
Share with :  

14. வியாபாரம்‌

 

ராஜ்‌ சைக்கிளை உருட்டிக்‌ கொண்டு

வீட்டுக்குள்‌ வந்தான்‌. எதிரே வந்த
மனைவியிடம்‌ கேட்டான்‌ அம்மா

எங்கே….?
அடுக்களையை கட்டிக்‌ காட்டி விட்டு
உள்ளே சென்றாள்‌, விஜி.
அடுக்களைக்கு சென்ற ராஜ்‌,
தோள்களை 6தொட்டூ அம்மா என்று
கெஞ்சலாக கூப்பிட்டான்‌.

“என்னய்யா…”

“ஒரு பத்தாயிரம்‌ கொடேன்‌”
“பத்தாயிரமா…?”

“ஆமாம்‌ அம்மா… ஆபீஸ்க்கு இந்த ஓட்ட சைக்கிள்ல எத்தனை நாள்‌
போவது… ஒரு பைக்‌ எடூக்கலாமன்றிருக்கிறேன்‌.”

“பத்தாயிரம்‌ ரூபாய்க்கு பைக்‌ கிடைக்குமா?”

“எசெகனன்ட்டா கிடைக்கும்‌.”

“அப்படின்னா…”

“பழைய பைக்கு வாங்கலாம்மா… என்‌ நண்பன்‌ ஒருத்தன்‌ பழைய பை
க்கை எனக்கு தாரேன்னுருக்கிறான்‌. அதுக்கு பத்தாயிரம்‌ வேணும்‌.”

“பத்தாயிரம்‌ ரூபாய்க்கு நான்‌ எங்கேய்யா போவேன்‌?”

“எப்படியாச்சும்‌ நீதான்‌ புரட்டி தரணும்‌”

“உன்‌ பொண்டாட்டியிடம்‌ கேட்டுப்பாரேன்‌…”
“என்னம்மா… விளையாடுறியா… அவ கிட்ட பணம்‌ எது…”

“பணம்‌ இல்லன்னா என்னடா… நகை ஏதாவது வாங்கி அடகு

வைக்கிலாமில்லே…”

“எல்லா நகையும்‌ அடகுக்கடையிலேதானே இருக்கு! போன வாரம்‌ கூட

தங்கச்சி பேறு காலத்துக்கு ஒரு நகையை அடகு வைச்சோமே…”

“அப்படின்னா… அவா… அப்பன்‌ கல்யாணத்தோட உனக்கு பத்தாயிரம்‌

ரூபா தருவதாக சொன்னாரே… அதை வாங்கிட்டு வரச்சொல்லேன்‌…”
“எப்படியம்மா…”

“நீ சும்மா இருய்யா… நான்‌ கேட்கிறேன்‌. விஜி… ஏய்‌… விஜி… இங்கே
வாபுள்ளே…”

“என்ன அத்தே…” எமதுவாக வந்து நின்றாள்‌, விஜி.

“உம்‌ புருஷன்‌ ஒரு பைக்‌ வாங்கணும்‌ என்கிறான்‌…”

“என்ன புள்ளே… வாயை மூடி நிக்கறே… உன்‌ அப்பா… உனக்கு
கல்யாணத்துல பத்தாயிரம்‌ தரணுமில்லே… அதை வாங்கிக்‌ கொடுபுள்ளே…”

“என்‌ அப்பா பத்தாயிரம்‌ தரணுமா… எதுக்கு?”

“என்ன புள்ளே இப்போ பேசுறே… 6ராக்கமா பத்தாயிரம்‌ ,தரணுமென்னு
பேசியிருந்ததை மறந்துட்டியா…!”

“அதல்லாம்‌ இல்ல… எங்கப்பா… எனக்கு செய்ய வேண்டிய சீர்‌

சினத்திலயல்லாம்‌ செய்து புட்டாக… இனி ஒரு பாக்கியுமில்ல…”
“என்னல… இவா இப்படி பேசுறா..அப்போ… நான்‌ வபாய்‌
சொல்றேனாக்கும்‌!”

“அதல்லாம்‌ எனக்கு ஒதெரியாது…” என்ற விஜி உள்ளே போக
புறப்பட்டாள்‌.

“என்னடி இது… அம்மா கேட்டுக்கிட்டு இருக்காங்க. நீ போய்க்கிட்டு
இருந்தா என்ன அர்த்தம்‌?” ராஜ்‌ கோபத்துடன்‌ கேட்டான்‌.

“நீங்க பேசுறதுல அர்த்தமில்லேன்னு அர்த்தம்‌…” விஜியின்‌ எவடுக்ககன
பதில்‌.

“யேய்‌… மரியாதையா சொல்றேன்‌. போய்‌ உங்கப்பாகிட்ட பத்தாயிரம்‌
வாங்கிட்டு வா…”

ராஜின்‌ குரல்‌ கோபத்தில்‌ கொப்பளித்தது.

“அல்லாம்‌ முடியாது…” உறுதியாக சொன்னாள்‌ விஜி.

“அப்படிவயன்றால்‌… என்‌ மகனோடு நீ வாழ முடியாது. போடி வளியே…
கத்தினாள்‌ மரகதம்‌.”

விஜி மவுனமானாள்‌..

“ஏய்‌…போய்‌…ரூபாய வாங்கிட்டு வந்து என்‌ மகனோடு குடித்தனம்‌ செய்‌.
இல்லேன்னா இங்கே வராதே…” மரகதத்தின்‌ உறுதியான கட்டளை.

“அம்மா…” இழுத்தான்‌ ராஜ்‌.

“நீ சும்மா இருல…இவளுக்கல்லாம்‌ பயந்தா கட்டூப்படியாகுமா? ஏலேய்‌
நாளை காலைல இவள பஸ்‌ ஏத்திவுட்டூடூல… சனியன்‌ தொலையட்டும்‌”.

விஜி அங்கிருந்து வேகமாக தன்‌ அறைக்குள்‌ சென்று கதவை டூட்டிக்‌
கொண்டாள்‌.

ஏலே… நீ இன்னைக்கு இந்த நடூவூட்ல படுத்துக்கல… இவளுக்குநல்லா
பாடம்‌ புகட்டணும்‌. திமிரு பிடிச்சவ… என்றவாறு தீப்‌ஏபட்டியை எடுத்து
அடுப்பை பற்றவைத்தாள்‌ மரகதம்‌. தீ…மதமதவன்று எரிந்தது.

மாதா கோவில்‌ மணி பனிஷண்டூ முறை அடித்து ஓய்ந்தது.

நடூ வூட்ல படுத்திருந்த ராஜ்க்கு தூக்கமே வரல. அம்மா இப்படி இரண்டு
பேரையும்‌ பிரிச்சு வைப்பாள்ன்னு அவன்‌ எதிர்பார்க்கல… இரவை தனிமை
யில்‌ கழிப்பது மிகவும்‌ கஷ்டமாக இருந்தது.

பக்கத்தில்‌ படுத்திருந்த அம்மாவை எட்டிப்‌ பார்த்தான்‌… நல்ல தூக்கம்‌!

மதுவாக எழுந்தான்‌… பூனை போல்‌ நடந்து… விஜி படுத்திருந்த
அறையின்‌ பக்கம்‌ போனான்‌. கதவை தள்ளிப்‌ பார்த்தான்‌. பூட்டியிருந்தது.
மதுவாக ஜன்னல்‌ பக்கம்‌ வந்தான்‌. திரை துணியை எமதுவாக

விலக்கினான்‌.

மங்கிய ஒவளிச்சத்தில்‌ அவளது கால்‌ பகுதிதான்‌ அவன்‌ கண்ணுக்கு
தென்பட்டது. ஒரு காலை குத்திட்டு ஒரு காலை நீட்டிருந்தாள்‌. மன்மத
கோலம்‌. செந்தாமரை 6பொற்பாதங்களில்‌ வள்ளி கொலுசு மணிகள்‌
முத்தமிட்டன.

கணுக்காலின்‌ வண்மை அவனைக்ிறங்கடித்தது. தொட்டு விடத்‌
துடித்தான்‌.

சட்டென அம்மாவின்‌ இருமல்‌ சத்தம்‌!

அப்படியே கீழே குனிந்தான்‌. ஒவட்கம்‌! மனைவியைப்‌ பார்ப்பதற்கு
திருட்டுத்தனமா?

கதவு அருகே வந்து நின்றான்‌.

“விஜி… விஜி…” மெதுவாக… மெதுவாக கூப்பிட்டான்‌.

“விஜ… விஜி…”

விஜி…. விஜி… சற்று பலமாக…

சப்தமில்லாமல்‌ கதவு திறந்தது.

ராஜ்‌…நாணி கோணிப்போய்‌ அவள்‌ கட்டிலில்‌ அமர்ந்தான்‌.

“விஜி…விஜி…என்னை மன்னிச்சிடு விஜி…”

“ஏன்‌…மன்னிக்கணும்‌?”

“அம்மா சொன்னது தப்புதான்‌…”

“தப்பா…இல்லியே…”

“இல்லையா…” அதிர்ந்து போய்‌ விஜியை பார்த்தான்‌.

“ஆமாம்‌ அதில்‌ தப்பேதுமில்லையே…”

“தப்பில்லையா… விஜி. உண்மையைத்‌ தான்‌ சொல்றியா…?’

“உண்மைதான்‌!”

“அப்படி சொல்லு என்‌ விஜி…” என்றவாறு அவள்‌ தோளை
தொடப்போனான்‌.

“நில்லுங்கள்‌! விஜி கத்தினாள்‌. இதுதான்‌ தப்பு…”

அவன்‌ முழித்தான்‌.

“உங்களை நான்‌ தொடுவதற்கு, உங்களோடு வாழ்க்கை நடத்துவதற்கு
உங்களுக்கு பத்தாயிரம்‌ வேணும்‌… என்னை நீங்க தொடுவதற்கு எனக்கு
எவ்வளவு கொடுப்பீங்க… ரேட்டை நீங்க சொல்றீங்களா… நான்‌
சொல்லட்டுமா…”

விஜி…

“வியாபாரமுன்னு வரும்போது எல்லாம்‌ சரியா… பேசி தீர்த்துக்‌ கிட்டாதான்‌
நல்லது… சொல்லுங்க எனக்கு எவ்வளவு தருவீங்க?”

“விஜி… அதல்லாம்‌ விட்டுடு நம்ம…” என்றவாறு மீண்டும்‌ அவளை
தொடப்போனான்‌.

“நிறுத்துங்க…! புனிதமான கணவன்‌ மனைவிக்கான உறவை பேரம்‌ பேச
வைச்சிட்டிங்களே… போங்க வளியே…” அழுத்தமாக சொன்னாள்‌.

ராஜ்‌ எமதுவாக எழும்பி கதவை நோக்கி வந்தான்‌.

“நிலவைப்‌ பார்த்து வானம்‌ சான்னது என்னைத்‌ தொடாதே…” என்ற
பாடல்‌ அந்தக்‌ நேரத்திலும்‌ எங்கிருந்தோ காற்றில்‌ மிதந்து வந்தது.

மறுநாள்‌ காலை.

சைக்கிளை துடைத்து ஆயில்‌ போட்டுக்‌ கொண்டிருந்தான்‌ ராஜ்‌.

“ஏலே… அவள பஸ்‌ ஏத்திவுட போகல…”

அம்மா கேட்டாள்‌.

“இல்லம்மா… எனக்கு இந்த சைக்கிளே போதும்‌!”