Siru kathaigal in tamil | நாளை முதல்‌ – இப்போதெல்லாம்‌

Categories சிறுகதைகள்Posted on
Siru kathaigal in tamil-nalai muthal‌-ippothellam‌
Share with :  

15. நாளை முதல்‌

இப்போதெல்லாம்‌ ரஞ்சிதா தன்‌

கணவனை முழுவதுமாக நம்புகிறாள்‌.
எப்போதும்‌ குடியே கதிலயன்று கிடந்தவன்‌
ஒரு மாதமாக குடிக்கவேயில்லை…
அதை நினைத்தும்‌ பார்க்கவில்லை.
ஒழுங்காய்‌ வேலைக்குப்‌ போகிறான்‌.
கிடைத்த சம்பளத்தை அப்படியே
ரஞ்சிதாவிடம்‌ கொடுக்கிறான்‌.

இதற்கு முன்‌ இப்படி இரண்டு
மூன்று தடவை சத்தியம்‌ பண்ணியிருக்‌
கிறான்‌. ஆனால்‌ இரண்டூ நாட்களில்‌
அதை மீறி விடுவான்‌. இப்போது
மூன்று குழந்தைகள்‌ மீதும்‌ சத்தியம்‌
பண்ணி, “இனிமேல்‌ குடிக்கமாட்டேன்‌ ரஞ்சிதா… என்னை நம்பு என்றான்‌.
ரஞ்சிதாவும்‌ இதோ பாருய்யா…” இதுதான்‌ உனக்கு கடைசி.. இனிமேல்‌ பாட்டி
லோடூ உன்னைப்‌ பார்த்தேன்னா. என்‌ மூணு குழந்தைகளையும்‌ கூட்டிட்டு

எங்கம்மா வீட்டுக்கு போயிடுவேன்‌ என்று சொல்லி விட்டாள்‌…

இதுநாள்‌ வரை அவன்‌ குடிக்க வில்லை.

“அம்மா.. ம்மா.. எங்க டீச்சர்‌ சிலேட்டு ஒபன்சில்‌ வாங்கிட்டு வரச்‌
சொன்னாங்க…” என்று ஓடி வந்தான்‌, கடைக்குட்டி சுரேஷ்‌.

“எங்க….டீச்சர்‌ யூனிபார்ம்‌ வாங்க பணம்‌ கொண்டூ வரச்‌ சொன்னாங்க
ம்மா..”.. என்றாள்‌ மூத்தவள்‌ பத்மா.

ம . . ட . உட. . .

எனக்கு நோட்டூ புத்தகம்‌ வாங்கணும்மா… என்றாள்‌ இளையவள்‌,

வனிதா.

“சரி…சரி…அப்பா வரட்டும்‌… எல்லாத்துக்கும்‌ எல்லாம்‌ வாங்கிடலாம்‌”
என்றாள்‌ ரஞ்சிதா.

செருப்பை வாசலில்‌ சுழற்றி விட்டூ கம்பீரமாக உள்ளே வந்தான்‌
செல்லையா.

“என்னங்க… சம்பளம்‌ வாங்கினிங்களா…”

“ஆமாம்‌… ரஞ்சிதா! எல்லாம்‌ கணக்கு பார்த்து வாங்கிட்டேன்‌”.

“நாளைக்கு சந்தைக்கு போய்‌… பிள்ளைகளுக்கு சிலேட்டூ, பென்சில்‌,
புத்தகம்‌ வாங்கிட்டு வந்தீடூங்க….

“சரி ரஞ்சிதா…”

வீட்டுக்கு வேண்டிய சாமான்களும்‌ வாங்கிட்டூ வாங்க…….. ஒரு
அரை கிலோ கோழி இறைச்சியும்‌, வாங்கிட்டு வாங்க…. கோழி குழம்பு வச்சி

ரொம்பநாளாச்சு… பிள்ளைங்க ஆசைப்பருது….”
“சரி…ரஞ்சிதா…”

“இந்திரா அக்கா இட்லி கடையில்‌ பாக்கி இருக்கு. அதையும்‌ கொடுத்துப்‌
புங்க…”

“சரி ரஞ்சிதா… இந்தா சம்பள பணம்‌….” அவள்‌ கையில்‌ திணிக்கும்‌
போது அவன்‌ கை அழுத்தத்தை அவள்‌ உணர்ந்தாள்‌, இன்றிரவை அவன்‌
கேட்கிறான்‌.

“சரிங்க… முதலில்‌ சாப்பிடுவோம்‌…. பிள்ளைங்களா…. வாருங்க
எல்லோரும்‌… எல்லோரும்‌” வரிசையாக உட்கார்ந்து சந்தோஷமாக
சாப்பிட்டார்கள்‌.

படுக்கையை விரித்தாள்‌, ரஞ்சிதா, குழந்தைகள்‌ சீக்கிரம்‌ தூங்கிப்‌
போனார்கள்‌. அவளின்‌ அரவணைப்புக்காக அவன்‌ காத்திருந்தான்‌.
அவள்‌ தன்னை முழுவதுமாக அவனிடம்‌ ஒப்படைத்தாள்‌.

மறுநாள்‌ காலையில்‌ எழுந்து…. வேண்டிய பைகளை எடுத்துக்‌
கொண்டு சந்தைக்கு போனான்‌, செல்லையா.

சாயங்காலம்‌ வரப்போகும்‌ தின்பண்டங்களை நினைத்துக்‌ கொண்டே
சந்தோஷமாக பள்ளிக்கு சென்றனர்‌, குழந்தைகள்‌.

“ரஞ்சிதா…” ஊரக வேலை வாய்ப்பு தீட்டத்திற்கு வேலைக்கு சென்றாள்‌

மாலையில்‌ ரஞ்சிதா வந்து ஏநடுநேரம்‌ ஆகியும்‌ எசல்லையா வந்த
பாடில்லை.

அப்பா வாங்கி வரும்‌ தின்‌ பண்டங்களுக்காக காத்திருந்து காத்திருந்து
குழந்தைகள்‌ உறங்கிப்‌ போனார்கள்‌. ரஞ்சிதாவும்‌ படுத்துக்‌ கொண்டாள்‌.

இரவு 10 மணிக்கு எசல்லையா வந்தான்‌…

மெதுவாக யாருக்கும்‌ தெரியாமலே திண்ணையில்‌ படுத்துக்‌ கொண்டான்‌.

காலையில்‌…

ரஞ்சிதா பழைய சூட்கேசை தாசி தட்டி எடுத்து துணிமணிகளை நீரப்பி
கொண்டிருந்தாள்‌.

“ஏலே சுரேஷ்‌…”

“என்னம்மா…”

“நீ போட்டிருக்கிற டவுசர்‌ அழுக்கா இருக்கு….கழற்றுல….”

“வேண்டாம்மா…”

அவனுடைய டவுசரை வேகமாக கீழே இழுத்தாள்‌….சுழன்று வந்தது.

“போம்மா… என்னம்மா… நீ” அவன்‌ வவட்கப்பட்டு கைகளால்‌ பொத்திக்‌
கொண்டான்‌.

வனிதாவும்‌, பத்மாவும்‌ “அய்யய்‌….யே…” என்று சிரித்தார்கள்‌.

சிரிக்காதேங்கடி…இங்கே நம்ப பொழப்பே சந்தி சிரிக்குது…. பேசாம கம்னு
இருங்கடி… எரிந்து விழுந்தாள்‌, ரஞ்சிதா.

திண்ணையில்‌ படூத்திருந்த எசல்லையா இதை கவனித்துக்‌
கொண்டிருந்தான்‌.

“ரஞ்சிதா…. என்னது? எங்கே போறே”

“சொல்லு ரஞ்சிதா…. எங்கே போறே….”

“இந்த பாருங்க…. இனிமே உங்ககூட எங்களால்‌ வாழ முடியாது.
உங்களை திருத்தவே முடியாது…”

“என்ன ரஞ்சிதா…. என்ன என்னவோ சொல்றே… அப்படி நான்‌ என்ன
தப்பு செய்தேன்‌?”

“நேத்து ராத்திரி எத்தனை மணிக்கு வந்தீங்க…”

“பத்தரை மணிக்கு…”

“என்னவெல்லாம்‌ வாங்கிட்டு வந்தீங்க….?”

“நீ சான்னதல்லாம்‌ வாங்கிட்டு வந்தேன்‌”.

“பிராந்திப்‌ பாட்டில்‌ நான்‌ வாங்கிட்டு வரச்‌சசான்னேனா….?”

“ஓ….அதுவா….நீ தப்பா நினைச்சிட்டே ரஞ்சிதா… எதிர்த்த வீட்டு தாத்தா
(தன்‌ மருமகளுக்கு ஒதரியாம பிராந்தி பாட்டில்‌ வாங்கிட்டு வரச்‌ சொல்லி
துட்டுத்‌ தந்து விட்டார்‌…. அதுதான்‌ ரஞ்சிதா…”

“ஏன்‌ ரஞ்சிதா பேசமாட்டேன்கிறே…. அவர்‌ கடைசி ஆசைன்னு வாய்விட்டு
கேட்டார்‌. என்னால்‌ மறுக்க முடியல…. அதான்‌ வாங்கிட்டு வந்தேன்‌,
ரஞ்சிதா…

அவளுக்கு போன உயிர்‌ திரும்பி வந்தது…. சரி…. இனிமே அடுத்த
வங்களுக்காகக்‌ கூட நீங்க பிராந்தி கடைபக்கம்‌ போகக்‌ கூடாது…”

“சரி….ரஞ்சிதா…”

கணவன்‌ மறுபடியும்‌ அந்த சாக்கடையில்‌ விழவில்லை என்பதை
தெரிந்து கொண்டதும்‌ அவள்‌ முகம்‌ மகிழ்ச்சியில்‌ மத்தாப்பூ ஆனது.

“ஏலே… சுரேஷ்‌ இங்கிட்டு வாலே…”

“போம்மா… நீ டவுசரை பிடிச்சு இழுப்பே….”

ஓடிப்போய்‌ அப்பாவின்‌ பின்னால்‌ நின்றான்‌. எல்லோரும்‌ வாய்விட்டு

ரஞ்சிதாவுக்கு வாழ்க்கை இனித்தது.