Sirukathaigal | பிச்சைக்காரி – ஆலய

Categories சிறுகதைகள்Posted on
Sirukathaigal-pichchaikkari-alaya
Share with :  

7 பிச்சைக்காரி

ஆலய மண்டபத்தில்‌ காலடி எடுத்து
வைக்கும்‌ போது “அம்மா… தாயே…”

என்ற பிச்சைக்காரியின்‌ குரல்‌ கேட்டு
கோவமாக திரும்பினாள்‌ விமலா.

“உன்னிடம்‌ எத்தனை தடவை சொல்வது.
உனக்குப்‌ பிச்சை எடுப்பது கேவலமா இல்லை…
வேலை செய்து பிழைக்க வேண்டியதுதானே…”
என்று கத்தினாள்‌.

அந்தப்‌ பிச்சைக்காரி ஒன்றுமே சொல்லவில்லை… அடுத்தவங்களை
நோக்கி தட்டை நீட்டி அம்மா… தாயே… என்றாள்‌.

“நான்‌ உன்னைத்தானே சொல்கிறேன்‌… கோயில்‌ வாசலில்‌ இருந்து
இனி பிச்சை எடுக்கக்‌ கூடாது…. போ வளியே! போய்‌ ஒவளியிலே போய்‌
பிச்சை எடு…” என்று கத்திவிட்டு கோயிலுக்குள்‌ கோவமாகப்‌ போனாள்‌
விமலா.

அவள்‌ மனம்‌ திருப்பலியில்‌ முழுமையாகப்‌ பங்கேற்கவில்லை.
எண்ணம்‌ எல்லாம்‌ அந்தப்‌ பிச்சைக்காரி நினைவாகவே இருந்தது.
சாமியாரிடம்‌ சால்லி அந்தப்‌ பிச்சைக்காரியை எப்படியாவது விரட்டி விட
வேண்டும்‌ என்று நினைத்தாள்‌.

சில நாள்கள்‌ கழிந்தன…

விமலாவிற்குத்‌ திருமண நாள்‌. கணவனும்‌ மனைவியும்‌
வவைகுவிமர்சையாகக்‌ கொண்டாடினார்கள்‌. ஓர்‌ அட்டைப்‌ பெட்டியில்‌… கேக்‌,
லட்டூ, பூந்தீ உட்பட பத்து வகை இனிப்புப்‌ பலகாரங்களை எடுத்துக்‌
கொண்டூ அனாதைப்‌ பிள்ளைகளுக்குக்‌ கொடுப்பதற்கு ஆதரவற்றோர்‌
இல்லத்திற்குப்‌ புறப்பட்டு வந்தார்கள்‌. இல்ல நீர்வாகியைச்‌ சந்தித்து
அனுமதி வாங்கினார்கள்‌.

“ஒரு மணிக்குக்‌ குழந்தைகள்‌ பள்ளியிலிருந்து வருவார்கள்‌…. நீங்கள்‌
உங்கள்‌ கையாலே கொடுங்கள்‌…” என்றார்‌ நீர்வாகி.

அப்போது அருகே உள்ள மண்டபத்தில்‌ ஒரு பெண்‌… ஆ… அந்தப்‌
பிச்சைக்காரி… இருப்பதைப்‌ பார்த்த விமலாவுக்குக்‌ கோவம்‌ பாத்துக்‌
கொண்டூ வந்தது. இங்கேயும்‌ பிச்சை எடுக்க அந்தப்‌ பிச்சைக்காரி
வந்தீட்டாளா… இங்கேயாரிடம்‌…? அனாதை குழந்தைகளிடம பிச்சை
எடுப்பாளா என்ன…?

“ஏன்‌ சார்‌? பிச்சைக்காரிவயல்லாம்‌ மடத்துக்குள்‌ அனுமதிப்பீர்களா…?”
என்று கேட்டாள்‌ விமலா.

“அந்தம்மா… பிச்சைக்காரி இல்லையம்மா… ஒரு கால்‌ நடக்க முடியாத
ஊனமுற்ற பெண்‌. வாரத்துக்கு ஒரு தடவை இங்கே வருவாங்க… மற்ற
அனாதை இல்லத்துக்கும்‌ போவாங்க… பிள்ளைகள்‌ மேல்‌ அவங்களுக்கு
ரொம்ப பாசம்‌… இப்போ பாருங்களேன்‌…”

பள்ளிவிட்டூ குழந்தைகள்‌ ஓடி வந்தார்கள்‌… “பாட்டியம்மா… பாட்டியம்மா…”
என்ற பல குரலோடு ஓடி வந்து அந்தப்‌ பிச்சைக்காரியைக்‌ கட்டிப்‌ பிடித்துக்‌
கொண்டார்கள்‌… சுற்றி சுற்றி வந்தார்கள்‌. அவள்‌ கையைப்‌ பிடித்துக்‌
கொண்டார்கள்‌… சேலையைப்‌ பிடித்து இழுத்தார்கள்‌.

அந்தப்‌ பிச்சைக்காரி என்ற பாட்டியம்மா… எல்லா குழந்தைகளையும்‌
அரவணைத்து, முத்தமிட்டு, அன்று கொண்டூ வந்த எள்ளுருண்டையை
ஒவ்வொன்றாகக்‌ கொடுத்தாள்‌. குழந்தைகள்‌ சந்தோஷமாக வாங்கிக்‌
கொண்டு டாட்டா” காட்டிச்‌ சென்றார்கள்‌.

இப்போது விமலாவிற்கு அவள்‌ பிச்சைக்காரியாகத்‌ தெரியவில்லை…
அன்னை தெரசாவின்‌ மறு உருவமாகத்‌ தெரிந்தாள்‌.