Tamil Siru Kathaigal | தமிழ்‌ அழகு – மாப்பிள்ளை

Categories சிறுகதைகள்Posted on
Tamil siru kathaigal-tamil‌ alagu-mappillai
Share with :  

8. தமிழ்‌ அழகு…

 

 

 

மாப்பிள்ளை வீட்டார்‌ வந்து இறங்கினார்கள்‌
அனைவரும்‌ ஓடி வந்து வரவேற்றார்கள்‌.

அவர்களுக்குள்‌ ஒரு கிசுகிசுப்பு…
“மாப்பிள்ளை… யாரு….?”
“அதோ வருகிறாரே… அவர்தான்‌!”
“அவரா…” சுரமிழந்து போனார்கள்‌
பெண்‌ வீட்டார்‌.
“மாப்பிள்ளையோ…
பட்டிக்காட்டான்‌ மாதிரி வேட்டிக்‌ கட்டிக்‌
கொண்டுூ வருகிறாரே… அவரா… பெண்‌

பார்க்கும்‌ படலம்‌ தொடங்கியது.
“மாப்பிள்ளை பெயர்‌ என்ன…?”

“தமிழ்‌ அழகன்‌”

“என்ன படித்திருக்கிறார்‌…?”’

“தமிழ்‌ இலக்கியத்தில்‌ முதுகலை…!” மாப்பிள்ளையே பதில்‌ சொன்னார்‌.
“தமிழா…. அப்படின்னா…”

“என்ன வேலை செய்கிறார்‌…?”

“தமிழ்‌ இலக்கிய பத்திரிகையின்‌… ஆசிரியராக இருக்கிறார்‌”.

“சம்பளம்‌ எவ்வளவு…?”’

“தானே சொந்தமாகப்‌ பத்திரிகை நடத்துகிறார்‌…”

“வேறு வேலை ஏதும்‌ உண்பா…”

“உண்டு…”

“என்ன வேலை….?”

“பத்திரிகைகளுக்குக்‌ கதை, கவிதை எழுதுவது…”

சுரமிழந்து போனார்கள்‌ பெண்‌ வீட்டார்கள்‌… “ஆளும்‌ சரியில்லை…
தொழிலும்‌ சரியில்லை… சரி…போயிட்டூ வாங்க…. பிறகு பதில்‌ சொல்லி
விடுகிறோம்‌…” என்றார்கள்‌.

“திடிரரன்று பண்‌ எழுந்தாள்‌. அப்பா, பேசி முடியுங்கள்‌. எனக்கு
மாப்பிள்ளையைப்‌ பிடித்திருக்கிறது. அவரது தமிழை மிகவும்‌
பிடித்திருக்கிறது. மூன்று ஆண்டுகளாக அவர்‌ எழுதும்‌ இலக்கியம்‌
கதை… கவிதை அனைத்தையும்‌ படித்து வருகிறேன்‌. இவர்தான்‌… இந்தத்‌
தமிழ்தான்‌ எனக்கு வேண்டும்‌” என்றாள்‌.

திருமண நாள்‌ அங்கே குறிக்கப்பட்டது.