Siru Kathaigal in tamil | ஆணா பெண்ணா – வாசலில்‌

Categories சிறுகதைகள்Posted on
Siru kathaigal in tamil-ana penna-vasalil‌
Share with :  

6. ஆணா…..  பெண்ணா. ….

வாசலில்‌ கார்‌ வந்து நின்றது. அதிலிருந்து
செலினா இறங்கி மெதுவாக நடந்து வந்தாள்‌.

மாமியார்‌ அன்னம்மாள்‌ வேகமாக ஓடி
வந்தாள்‌. “டாக்டரைப்‌ பார்த்தீங்களா?”

பதில்‌ ஏதும்‌ எசால்லாமல்‌ சசலினா அழுகை
நிறைந்த கண்களோடூ அவளைக்‌ கடந்து

சென்றாள்‌.

“ஏய்‌… உன்னைத்தானே கேட்கிறேன்‌. டாக்டர்‌ என்ன சொன்னார்‌?”
மீண்டும்‌ கேட்டாள்‌ அன்னம்மாள்‌.

மீண்டும்‌ எமளனம்‌, காரை ஓரமாக நிறுத்திவிட்டு சேவியர்‌ உள்ளே
வந்தான்‌.

“ஏன்டா… உன்‌ பொண்டாட்டிக்கு இருக்கிற திமிர பார்த்தியா… நான்‌
கேட்டுக்கிட்டே இருக்கேன்‌, மூச்சுகாட்டாம போய்கிட்டே இருக்கா”.

“என்னம்மா… கேட்டே…”

டாக்டரைப்‌ பார்த்தீங்களான்னு கேட்டா, திமிரா போறா… மூதேவி
என்றாள்‌ அன்னம்மாள்‌.

“அவளைத்‌ திட்டாதே அம்மா. என்கிட்ட கேளு, நான்‌ சொல்றேன்‌”.

“இருந்தாலும்‌ அவளுக்கு நீ ரொம்பதான்‌ செல்லம்‌ கொடுத்திருக்கே.
சரி டாக்டரைப்‌ பார்த்தீங்களா?”

“பார்த்தோம்‌…” ஒற்றை வரி பதில்‌!

“என்ன சொன்னார்‌… வயிற்றிலிருப்து ஆண்‌ குழந்தையா, பண்‌
குழந்தையா?”

“வபண்‌ குழந்தைதான்‌”

“என்ன…. மீண்டும்‌ பண்‌ குழந்தையா?”

‘தலையசைத்தான்‌ சேவியர்‌.

“உடனே அழிச்சிற சொல்லு. ஏற்கனவே ஒரு பொம்பளப்‌ புள்ள
பெத்தாச்சு. மீண்டும்‌ பாம்பளப்‌ புள்ள வேண்டாம்‌. அத அழிக்கச்‌
சொல்லு”.

ஓரமா நின்ற செலினா, விக்கி விக்கி அழுதாள்‌.

“அம்மா…” – சேவியர்‌.

என்னடா, நான்‌ சொல்றது காதுல விழல்லியா?

“ஒரு பிரச்சனை இருக்கம்மா…”

“என்னடா பிரச்சனை?”

“அவா உடம்பு ரொம்ப பலவீனமாக இருக்காம்‌. குழந்தையை அழிச்சா
அவள்‌ உயிருக்கே ஆபத்து இருக்காம்‌”.

“அதுக்கென்ன….?”

“என்னம்மா” இப்படி சொல்றே கோபத்துடன்‌ கேட்டான்‌. எசலினா வாய்‌
விட்டூ அழுதாள்‌.

“ஏன்டா அவசரப்பட்டுக்‌ குதிக்கீறே. அதுக்ககன்ன அவள ஒரு நல்ல
டாக்டர்‌ கிட்டே பாத்து உயிரைப்‌ பாதுகாத்துடலாம்‌ என்றுதான்‌

சொன்னேன்‌…” என்று சமாளித்தாள்‌ அன்னம்மாள்‌. எமளனம்‌ நிலவியது.

“அம்மா… இந்தக்‌ குழந்தையை அவள்‌ ௦ெபெற்றெடுக்கட்டும்‌. அடுத்த
குழந்தைக்குப்‌ பாத்துகிடலாம்‌….”

அடுத்ததும்‌ வபபண்ணா… இருந்தா…? என்ன செய்வே…? நீ இந்த
குடும்பத்துல பண்‌ எடுக்க வேண்டாமென்று எத்தனை தடவை உன்னிடம்‌
சொன்னேன்‌. இது பொம்பள வாரிசு குடூம்பமடா. அவா கூடப்‌ பிறந்தது
மூணும்‌ பொம்பளப்‌ புள்ள. அவா அக்காளுக்கு இரண்டூ பொம்பளப்‌ புள்ள.
இவளுக்கும்‌ அப்படித்‌ தான்டா இருக்கும்‌. பேசாம… அழிக்கச்‌ சால்லுடா
என்று அழுத்தமாகக்‌ குத்தீக்‌ காட்டிப்‌ பேசினாள்‌ அன்னம்மாள்‌.

அவன்‌ பதில்‌ சொல்லாமல்‌ மமளனமானான்‌.

அப்போது காலிங்வபல்‌ ஒலித்தது. சேவியர்‌ வளியே சென்றான்‌.
அப்பாவின்‌ தங்கை எலிசபெத்‌ வந்திருந்தாள்‌.

“வாங்க அத்தை. வாங்க, நல்லா இருக்கீங்களா?”

“நல்லா இருக்கேன்ப்பா…” உள்ளே வந்தாள்‌.

“ஏன்‌ எல்லாரும்‌ எமளனமாக இருக்கீங்க? என்ன அண்ணி ஏதும்‌
பிரச்சனையா? எலிசபெத்‌ கேட்டாள்‌”.

“பிரச்சனை ஒண்ணுமில்லை… சரி நீ வேலைக்குப்‌ போகலையா?”

“இன்றைக்கு லீவு போட்டுட்டேன்‌ அண்ணி. இந்த நர்ஸ்‌ வேல ரொம்ப
கஷ்டமா இருக்கு அண்ணி. அங்கும்‌ இங்கும்‌ ஓட முடியல. ரொம்ப கஷ்டம்‌.
அதுதான்‌ இன்னைக்கு லீவு போட்டுருக்கேன்‌. சரி… எசலினா… நீ ஏன்மா

சோகமாக இருக்கே? என்ன விசயம்‌?”

ஒண்ணுமில்ல… எலிசபெத்‌! இவா இரண்டாம்‌ குழந்தை உண்டாயிருக்கா…
என்றாள்‌ அன்னம்மாள்‌.

“அது சந்தோசம்தானே…”

“இதுவும்‌ பாம்பள புள்ளதானாம்‌…”
“யாரு சொன்னா?”

“டாக்டர்‌ நந்தகுமார்‌…”

“வயிற்றிலிருக்கும்‌ குழந்தை ஆணா… எபண்ணான்னு பார்க்கக்‌
கூடாதுன்னு சட்டம்‌ இருக்கே”

“முதல்ல முடியாதுன்னுதான்‌ சொன்னார்‌. டாக்டர்‌ நந்தகுமார்‌ உங்க
அண்ணனுக்கு ரொம்ப வேண்டியவர்‌. அதனால்‌ பார்த்துச்‌ சொன்னார்‌”.

“சரி… இரண்டாவது பெண்‌ குழந்தையா இருந்தா என்ன”

“அம்மா வேண்டாமுன்னு அழிக்கச்‌ சொல்லுறாங்க” என்றான்‌ சேவியர்‌.

“கொலை செய்யச்‌ சொல்லுறீங்களா அண்ணி”

இல்ல… இல்ல… அழிக்கத்தான்‌ சொல்லுறேன்‌. என்றால்‌
பதற்றத்துடன்‌ அன்னம்மாள்‌”.

“இரண்டும்‌ ஒன்றுதான்‌. காலை செய்றதுக்கு நம்ம கிறிஸ்தவ மதத்துல
இடம்‌ இருக்கா? நம்ம கும்பிடுற இறைவன்‌ இயேசு அனுமதிக்கிறாரா?
மெளனம்‌…”

“சொல்லுங்கண்ணி… நம்ம மதத்துல மட்டூமில்ல, எந்த மதமும்‌ இதை
அனுமதிக்கல. அதை முதலில்‌ ஒதெரிந்து கொள்ளுங்க”.

மெளனம்‌.

“சரி உங்க வீட்டில்‌ நீங்கள்‌ எத்தனையாவது…?”
“மூணாவது…”

“மூத்தது இரண்டும்‌ பண்தானே!”

“ஆமாம்‌”

“இதுபோல்‌ உங்க அம்மா அப்பா நினைத்திருந்தாங்கன்னா நீங்க பிறந்‌
திருப்பீங்களா அண்ணி?” என்று ஆவேசமாக கேட்டாள்‌ எலிசபெத்‌.

அன்னம்மாளுக்கு ஈட்டியால்‌ நஞ்சைக்‌ குத்திப்‌ பிளந்ததுபோல்‌ இருந்தது.

“அண்ணி நான்‌ சொல்றதை தயவு செய்து கேளுங்க. அறிவியல்‌ முறை
ப்படி பேசுறேன்‌. ஒரு வயிற்றில்‌ வளரும்‌ கருவை ஆணா… ஒபண்ணா….
என்று நீர்ணயம்‌ செய்வது பபண்ணில்லை. ஆண்தான்‌! ஆணினுடைய
உயிர்‌ அணுவில்தான்‌ அந்த அம்சம்‌ பொருந்தியிருக்கிறது. அதைத்‌ தெரிந்து
கொள்ளுங்க. இப்போ எசலினா வயிற்றில்‌ வளரும்‌ வபண்‌ குழந்தைக்கு
காரணம்‌ அவள்‌ இல்லை. உங்கள்‌ மகன்தான்‌ காரணம்‌. நீங்கள்‌
தண்டனை கொடுக்க நினைத்தால்‌ உங்கள்‌ மகனுக்குக்‌ கொடுங்கள்‌”
என்றாள்‌ எலிசபெத்‌.

அன்னம்மாள்‌ அதிர்ந்துபோய்‌ தலைகுனிந்தாள்‌.

“எசெலினாவைக்‌ கூப்பிட்டு சமாதானப்படுத்துங்க அண்ணி”

(தன்‌ தவறை உணர்ந்த அன்னம்மாள்‌ செலினாவிடம்‌ சசன்று,
அரவணைத்து, என்னை மன்னித்து விடம்மா… இறைவன்‌ விருப்பப்படி
எல்லா, நடக்கட்டும்‌. ஆணோ… ௨பண்ணோ… எல்லாம்‌ நம்ம
குழந்தைதான்‌. கடவுள்‌ தருவதை நாம்‌ மன உவப்புடன்‌ ஏற்றுக்‌ ககாள்வோம்‌.

செலினா முகம்‌ தாமரையாக மலர்ந்தது. மகிழ்ச்சி மனநிறைவு அங்கே
நிலவியது.